பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1057

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 懿皇

என்ருர். புறப்பொருளை நோக்களது பேரறிவுமாத்திரமாய் நிற்கின்ற முழுமுதற்பொருளே சிவம் எனவும், அச் சிவம் உயிர்களுக்குப் பசுத்துவத்தை விளக்குதலிற் கொண்டுள்ள அருளே சத்தியெனவும் கூறப்படும். " தன்னை விளக்குவ து உம் விடயங்களை விளக்குவது உம் தானேயாகிய ஞாயிருென்றுதானே விடயங்களை விளக்குழிக் கதிர் எனவும், தன்னை விளக்குழிக் கதிரோன் எனவும் தாதான்மியத்தான் இருதிறப்பட்டு இயைந்து நிற்கும் : அதுபோலப் புறப்பொருளை நோக்காது அறிவு மாத்திரை யாய்த் தன்னியல்பின் நிற்பது உம், புறப்பொருளை நோக்கி நின்றுணர்த்துவது உம் ஆகிய இரண்டியல்புடைய பேரறி வாகிய சைதன்னியம் ஒன்றே, அங்ங்னம் புறப்பொருளை நோக்கி நிற்கும் நிலையிற் சத்தி எனவும், புறப்பொருளை நோக்காது அறிவு மாத்திரையாய் அவாவாது நிற்கும் நிலையிற் சிவம் எனவும் தாதான்மியத்தான் இருதிறப்பட்டு நிற்கும் ” எனச் சிவஞான முனிவர் கூறும் விளக்கம் இங்கு நோக்கத்தகுவதாகும். சிவயோகிகள் நிலமுதற் சிவeருகிய முப்பத்தாறு தத்துவங்களையும் படிமுறையானே ஏறிக்கடந்து சிவத்தை அணையுமாறுபோலத் திண்ண ஞரும் காளத்தி மலையிற் படிவழியே ஏறிச்சென்று குடுமித் தேவரைச் சார்ந்தார் எனச் சைவ சித்தாந்தத் தத்துவ உண்மையினை உவமையாக ஆசிரியர் எடுத்தாண்டுள்ள திறம் ஈண்டு உணரத் தகுவதாகும்.

ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களும் உயிர்களை அநாதியே பற்றியுள்ளன என்பதும், முற்றுனர் வும் வரம்பிலாற்றலும் பேரருளும் உடைய இறைவன் உயிர்களை அதாதியே பிணித்துள்ள மலப் பிணிப்பு நீங்க உயிர்களுக்கு உலகு உடல் கருவி நுகர்பொருள்கள் ஆகிய வற்றைப் படைத்துக் கொடுத்து இவ்வுலகில் வாழ்வாங்கு வாழச் செய்து பாசப்பிணிப் பொழித்து மீண்டும் பிறவா நெறியாகிய வீடுபேற்றினைத் தந்தருள்கின்ருன் என்பதும், உயிர்கள் தம்மைப் பற்றியுள்ள பாசப் பிணிப்பு அகல அருளேயுருவாகிய ஈசனை அன்பினல் மறவாது வழி படுதல் வேண்டுமென்பதும் சைவ சித்தாந்த நூற்றுணி பாகும். இதனை,

66