பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1071

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 1055

பாடலில் சேக்கிழார் புலப்படுத்திய திறம் கூர்ந்துணரத் தகுவதாகும்.

இந்நூலில், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர், திருமூலர், காரைக்காலம்மையார், ஐயடிகள் காடவர்கோன் சேரமான் பெருமாள் ஆகிய திருமுறை யாசிரியர்களின் வரலாறுகளை விரித்துக்கூறும் நிலையில் அவ்வாசிரியர்கள் திருவாய் மலர்ந்தருளிய தேவாரப் பதி கங்கள் முதலாகவுள்ள திருமுறைப் பனுவல்களின் சொற் பொருள் நலங்களையும் கருத்துக்களையும் எடுத்துக்கூறும் முறையில் அமைந்த பகுதிகள் அத் திருமுறைகளுக்கு அருண்மொழித்தேவர் அப்பெருமக்கள் திருவடிகளை வணங்கி அவர்தம் திருவருட்டுணைகொண்டு கண்டுணர்த் திய சிறந்த உரை விளக்கங்களாகத் திகழ்கின்றன.

இலக்கியங்களுக்கு அழகுதரும் தன்மை உவமை உரு வகம் சிலேடை முதலிய பொருளணிகளையும் மடக்கு முதலிய சொல்லணிகளையும் தன்னகத்தே கொண்டு நவில் தொறும் சுவைமிகப் பயப்பதாய், பத்திச் சுவை ஊற்றெடுத் துப்பாயும் திருவருட் கடலாய், தித்திக்குந் தெள்ளமுதாய்த் திகழும் திருத்தொண்டர் புராணமாகிய செந்தமிழ்க் காப்பி யத்தைத் தமிழ் மக்களும் சிறப்பாகத் தமிழ் பயிலும் மாணவர் அனைவரும் ஆர்வமுடன் கற்றுப் பயன்பெறுதல் வேண்டுமெனத் தொண்டர்சீர் பரவுவாராகிய சேக்கிழார் பெருமான் திருவடிகளை இறைஞ்சிப் போற்றுகின்றேன்.

என்றும் இன்பம் பெருகும் இயல்பிளுல் ஒன்று காதலித் துள்ளமும் ஓங்கிட மன்றுளாரடியாரவர் வான் புகழ் நின்ற தெங்கும் நிலவியுலகெலாம்

திருச்சிற்றம்பலம்