பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

பன்னிரு திருமுறை வரலாறு


உண்மைகள் சிவபுராணமாகிய இத்திருப்பாட்டில் விரித்து உரைக்கப்பெற்றுள்ளன. இத்திருப்பாட்டு சிவனது அருவ நிலையைக் கூறுவதெனவும் “ ஈசர் தமக்கியல்பான திருநாம முதலெவையும், மாசறவே வாழ்கவென வாழ்த்துகின்ற அருட் குறிப்பு " உடையதெனவும் சான்ருேர் கூறுவர்.

உ. கீர்த்தித் திருவகவல்

திருவாசகத்தின இராண்டாந் திருப்பாட்டாகிய இவ்வக வல், சிவபெருமான் தன்பால் அன்புடைய மெய்யடியார் களுக்கு எளிவந்து அருள்சுரந்த புகழ்ச்செய்திகளே விரித்து உரைப்பதாகலின் கீர்த்தித் திருவகவல் என்னும் பெயர்த்தா யிற்று. கீர்த்தி - புகழ். இதற்குச் சிவனது திருவருட் புகழ்ச்சி முறைமை என முன்னேச் சான்ருேரொருவர் கருத் துரைத்துள்ளார். புகழ்பெருகுஞ் செய்கையெலாம் புகல்

r أتيتي # { ருகுஞ் அகவல் எனப் போற்றப்பெறுஞ் சிறப்புடைய இக் ඵ් 芷 ; శ్రీ ماه ممتم تكي கீர்த்தித் திருவகவலாகும். நிலைமண்டில ஆசிரியப்பாவாக

மைந்த இப்பாடல் 146 அடிகளையுடையதாகும்.

.3( # .3 - ಟ್ಲಿ نت ن!ئ, ويج

தில்லே மூதூரில் ஐந்தொழிற் றிருக்கூத்தியற்றும் சிவ பெருமான் உலகத்து உயிர்கள் தோறும் உயிர்க்குயிராய்த் திகழும் தன்னுடைய அருட்குணங்கள் யாண்டும் விளங்க இவ்வுலகில் அன்பிற்சிறந்த அடியார்கள் பொருட்டு நிகழ்த்தி அருளிய அற்புத நிகழ்ச்சியாகிய திருவிளையாடல்களை மணி வாசகப் பெருமான் இத் திருவகவலில் விரித்துரைத்துப் போற்றியுள்ளார். இதன் கண் குறிப்பிடப் பெற்ற அருட் செய்திகளின் விளக்கத்தைப் பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவிளையாடல், பரஞ்சோதி திருவிளையாடல், திருவுத்தர கோச மங்கைப் புராணம், திருப்பெருந்துறைப் புராணம் முதலிய நூல்களைக் கொண்டு ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம்.

3.3

& 帝

திருப்பெருந்துறையில் அருட்குருவாகப்போந்து மெய்ப்

జో ఫ్ల பொருளை உபதேசித்தருளிய சிவபெருமான் வாதவூரடிகளை

  • مي عبه

நோக்கி நலமலி தில்லையுட் கோலமார்தரு பொதுவினில் வருக எனப் பணித்தருளி மறைந்தமையும், அந்நிலையில் உடனிருந்த அடியார்கள் இறைவனது பிரிவாற்ருது தம் உடம்பினைத் துறந்து இறைவனுடன் இரண்டறக்கலந்தமை யும், அங்கனம் இறைவனையடையப் பெருது எஞ்சி நின்ற