பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

பன்னிரு திருமுறை வரலாறு


திருவண்டப் பகுதியாகிய இவ்வகவல் சிவனுடைய துாலசூக்குமத்தை வியந்தது என முன்னுள்ளோர் கருத் துரை வரைந்துள்ளனர். இறைவன் செய்தருளும் ஐந் தொழில்களில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் என்னும் நான்கினைப் பற்றிப் பொதுவாகவும் விரிவாகவும் தெரிந்துகொள்ளுதற்கேற்ற அரும்பொருள்கள் இதன்கண் விரித்துரைக்கப் பெற்றுள்ளன. இதன் பொருளமைதியை, திகழ்திருவண்டப் பகுதித் திருவகவல் செப்பியது தகுசிருட்டி திதியொடுக்கஞ் சற்று திரோ தம்பொதுவாய் அகலமுறத் தேர்ந்திடவே யருளிய நற் பொருளாகும் " எனவரும் திருவாசக ១...ត្រា இனிதுணரலாம்.

அளக்கலாகாப் பேரளவினவாகிய அண்டங்களெல்லாம் இறைவனது அருள்வெளிப்பரப்பினுள்ளே சிறிய அணுக் களை யொப்ப அடங்கித் தோன்றுதலின், அவ்விறைவனது பெருமை, சொல்லுக்கும் மனத்திற்கும் எட்டா இயல்பினது. அண்டங்களின் தலைவராக நியமிக்கப் பெற்ற தெய்வங் களாகிய நுண்ணிய உயிர்களாலும் அறியவொண்ணுத நிலை யில் உயிர்க்குயிராய் உள்நின்று இயக்குவோன் இறைவன் ஒருவனேயாதலின் அப்பெருமான் நுண்ணியவற்றுளெல் லாம் மிகவும் நுண்ணியன். உயிர் வாழ்க்கைக்கு இன்றியமை யாச் சிறப்பினவாய் அண்டப் பரப்பில் திகழும் ஞாயிறு, திங்கள், வான், வளி, தீ, நீர், மண் முதலிய எல்லாப் பொருள் களுக்கும் ஆற்றலே வழங்கி அவற்றைத் தொழிற்படுத்து வோன் அம்முதல்வனே. பேரருளாளனுகிய அப்பெரியோன் அன்புடைய அடியார்களுக்கு அணுகி நின்றருளும் எளிமைத் திறமும் அன்பரல்லாதார்க்கு மிக மிகச் சேய்மையனுக அப்பாற்பட்டு நிற்கும் அருமைத்தன்மையும் ஒருங்குடை யான். இறைவன் மாதொரு பாகளுக எளிவந்து தோன்றி

w --- "אג * r § ^: - & - . - * வழங்கிய பேரின்பம், உடம்போடிருந்து பொறுத்தற்கு இயலாதபடி உள்ளம் முழுவதையும் அகத்திட்டுக் கொண்டது; என வாதவூரடிகள் தாம் பெற்ற அருளாரமுதப் பேரின்ப நுகர்ச்சியை இத் திருவகவலில் விரித்துக் கூறியுள்ளார்.

வேண்டுதல் வேண்டாமையிலான் ஆகிய இறைவன் திருவடிகளை இடைவிடாது போற்றும் பெரியோர்களே # *—? & # - a- 4 علي او. f; *#: , ; : :

யான்' 'எனது என்னும் இருவகைப் பற்றும் நித்த நீத்தா ராவர். புலன்களிற் செல்லும் அவா ஐந்தினையும் அடக்கிய