பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் }35

என்பது திருப்பெருந்துறைப் புராணமாகும். ஞானம்பெற்ற நல்லுயிரைக் கீழ்நிலைக்கு இழுத்துச்செல்லும் இழிநிலையின தாகிய ஊனுடற்கண் உள்ள ஆசையை விலக்கிப் பேரின்ப நிலையினை அருளவல்ல இறைவனது திருவருளைப் பெறுதற் கும், அவ்விறைவனது பொருள் சேர் புகழைப் பாவித் துதித் தற்கும், அவனருள் பெற்ற பழவடியார்களின் திருக்கூட்டத் தைக் கண்டு மகிழ்வதற்கும், பஞ்சேரடியாள் பங்களுகிய இறைவன் திருவாயால் அஞ்சேல் என்னத் தம்மை அழைத்து அருள்புரிதற்கும் தம் மனத்தெழுந்த தூய ஆசையினை அடிகள் இப்பதிகப் பாடல்களில் விரித்துக் கூறியுள்ளமை காணலாம்.

'தன்னுலே தனையறிந்தால் தன்னையுந் தானே காணும்' (சிவப்பிரகாசம்-22) எனவும், அதிலறிவடங்கி மன்னிட வியாபியாய வான் பயன் தோன்றும் (டிை 28) எனவும் கூறுமாறு, எல்லாம்வல்ல இறைவனுகிய தலைவனையுணர்ந்து அவ்வுணர்வின் பயணுக ஆன்மாவாகிய தம்மியல்பினை உணர்தல்வேண்டும் என மெய்ந்நூல்கள் கூறுங்கூற்று, சிவ ரூபத்தால் ஆன்ம தரிசனமும், சிவ தரிசனத்தால் ஆன்ம சுத்தியும் ஆமாறு கூறிற்று என விளக்கங் கூறுவர் சிவஞான முனிவர். இங்ங்னம் சிவ ரூபத்தால் ஆன்ம தரிசனம் உணர்ந்த நிலையில், ஆன்மாவாகிய தம் இயல்பு விளங்கத் திருவாதவூரடிகளால் ஆசைப்பத்தாகிய இப்பதிகம் அருளிச் செய்யப்பெற்றமையால் இதற்கு ஆத்தும இலக்கணம் என முன்னுள்ளோர் கருத்துரை வரைந்தமை மிகவும் பொருத்தமுடையதேயாகும்.

' மொய்ப்பால் நரம்பு கயிருக மூளையென்பு தோல் போர்த்த, குப்பாயம் புக்கிருக்ககில்லேன் ' (2) எனவும், " சீவார்ந்து ஈமொய்த்து அழுக்கொடு திரியும் சிறுகுடில் ' (3) எனவும். 'மிடைந்து எலும்பு ஊத்தை மிக்கு அழுக்கூறல் வீறிலி நடைக்கூடம் ' (4) எனவும், “ அளிபுண் ணகத்துப் புறந்தோல்மூடி அடியேனுடை யாக்கை ” (5) எனவும் இவ்வாறு தமது உடம்பின் தூய்மையில்லாத் தன்மையும் தம் முயிரின் இயல்பும் பகுத்துணர்ந்து

' எய்த்தேன் நாயேன் இனி இங்கிருக்க கில்லேன் இவ்வாழ்க்கை வைத்தாய் வாங்காய் வாளுேரறியா மலர்ச் சேவடியானே ' (6) என அடிகள் இறைவனை வேண்டிப் போற்றுதல் இங்கு நோக்கத்தக்கதாகும்.