பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 露靈歌

சள. திருவெண்பா திருவாதவூரடிகள் தாம் பெற்ற சிந்தையின் நிறை வாகிய சிவமே பெறுந் திருவினை, பெருத ஏனையோரும் பெற்று மகிழுமாறு விளங்க அறிவுறுத்தும் அழகிய வெண் பாக்களாலாய பனுவலாதலின், இது திருவெண்பா என்னும் பெயர்த்தாயிற்று. அறிவினுற் சிவனேயாகிய மணிவாசகப் பெருந்தகையின் சிவமாந்தன்மைப் பெரு வாழ்வினைத் தெரி விப்பது பற்றி இதற்கு அணைந்தோர் தன்மை' என முன் னுேர் கருத்துரை வரைந்தனர்.

" தொந்தமா மலமறுத்துச் சுகம்பெருக்கிப்

பெருந்துறைவாழ் சோதி என்றன் சிந்தையே ஊராகக் கொண்டிருந்தான்

என்றுரைத்தல் திருவெண்பாவாம் ” என்பது திருப்பெருந்துறைப் புராணம். திருவெண்பா என் னும் இப்பனுவல் பதினெரு வெண்பாக்களை யுடையதாகும். இதன்கண்,

வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி ஆரா அமுதாய் அமைந்தன்றே - சீரார் திருத்தென் பெருந்துறையான் என் சிந்தை மேய ஒருத்தன் பெருக்கும் ஒளி' எனவும்,

யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான் யாவர்க்குங் கீழாம் அடியேனே - யாவரும் பெற்றறியா இன் பத்துள் வைத்தாய்க்கென்

எம்பெருமான் மற்றறியேன் செய்யும் வகை எனவும்,

மூவரும் முப்பத்து மூவரும் மற்ருெழிந்த தேவரும் காணுச் சிவபெருமான் - மா வேறி வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க மெய்யகத்தே இன்பம் மிகும் எனவும்,

இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும் துன்பம் தொடர்வறுத்துச் சோதியாய் - அன்ப்மைத்துச் சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே ஊராகக் கொண்டான் உவந்து எனவும் வரும் திருவெண்பாக்கள் மணிவாசகப் பெருமான் பெற்ற சிவமேபெறுந் திருவாகிய பேரானந்தத்தினை இனிது புலப்படுத்தல் காணலாம்.