பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 2重留

" உள்ள மலமூன்றும் மாய உகுபெருந்தேன்

வெள்ளந் தரும்பரியின் மேல்வந்த - வள்ளல் மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக் கருவும் கெடும்பிறவிக் காடு " “ வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாரும்

தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாரும் - சூழ்ந்தமரர் சென் றிறைஞ்சி யேத்தும் திருவார் பெருந்துறையை நன்றிறைஞ்சி யேத்தும் நமர் " " காணுங் கரணங்கள் எல்லாம் பேரின் பமெனப்

பேணும் அடியார் பிறப்பகலக் - காணும் பெரியான நெஞ்சே பெருந்துறையில் என்றும் பிரியானே வாயாரப் பேசு ” " பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த மாசின் மணியின் மணிவார்த்தை - பேசிப் பெருந்துறையே யென்று பிறப்பறுத்தேன் நல்ல மருந்தினடி யென்மனத்தே வைத்து ”

எனவரும் திருப்பாடல்கள் திருவாதவூரடிகளது அநுபவத் தினை இனிது புலப்படுத்தும் நிலையில் அடைந்திருத்தல் காணலாம்.

உள்ளும் புறம்பும் ஒரு தன்மைக் காட்சியராய் இறை நிறைவில் அழுந்துதலாகிய ஞான நிட்டை மேவிய அடியார் களுக்குப் பண்டைப் பயிற்சி வயத்தால் சுட்டுணர்வு பற்றிப் பிரபஞ்ச வாழ்வு காட்சிப்பட வருமானல், அவர்கள், அதனைக் காணும் பொழுதே இறைவன் அதற்கு உள்ளேயும் புறத் தேயும் நிற்கும் நிலையினைக்கண்டு அதனை அறிந்துகொள்ளு தல் அரிதாயின், பிண்டத்தில் நிற்கும் நிலையுள் ஒன்றின் வைத்து அறிந்து அது வாயிலாகப் புகுந்தாயினும் இறை வனது இயல்பினைத் தலைப்பட்டு அறிந்து அங்கே காணுங் கரணங்கள் எல்லாம் பேரின்பமெனப் பேணி இவ்வாறு கருவிகளோடும் கூடி நிற்பதாகிய நனவு நிலையிலேயே, கருவி யொன்றிளுேடும் கூடாது தொழிலிறந்து நிற்கும் நின்மல துரியாதீதம் எனப்படும் தூய நிலை கைகூடும்படி முயல்வோர், சிவானுபவம் தமதாகக் கொண்டு அநுபவிக்கப் பெறுவர். இந்நுட்பத்தினை,

" இந்நிலை தான் இல்லையேல் எல்லாம் ஈசன்

இடத்தினினும் ஈசன் எல்லா இடத்தினினும் நின்ற அந்நிலையை அறிந்தந்தக் கரணங்கள் அடக்கி

அறிவதொரு குறி குருவின் அருளில்ை அறிந்து