பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

பன்னிரு திருமுறை வரலாறு


பறந்திருந் தும்பர் பதைப்பப் படரும் புரங்கரப்பச் சிறந்தேரி யாடிதென்றில்லை யன்னுள் திறத்துச் சிலம்பா அறந்திருந் துன்னருளும் பிறிதாயின் அருமறையின் திறந்திரிந் தார்கலியும் முற்றும் வற்றுமிச்

சேனிலத்தே. (2.13) என்னும் திருக்கோவையாகும். இது,

நிலம்புடை பெயரினும் நீர் தீப் பிறழினும் இலங்குதிரைப் பெருங்கடற் கெல்லே தோன்றினும்

    • « » в за ф а о» 8

கேடெவ னுடைத்தோ தோழி

ஓங்குமலை நாடனெ டமைந்த நம் தொடர்பே'

(குறுந்தொகை - 373) எனவரும் பாடற்பொருளைத் தன்னகத்துக் கொண்டுள்ளமை காணலாம்.

உடன்போக்கில் தலைவனுடன் சென்ற தலைவியைத் தேடிச் சுரத்திடைச் சென்ற செவிலியை நோக்கிய சான் ருேர், சந்தனமும் முத்தும் சங்கும், தாம் பிறந்த இடத்திற்குச் சிறிதும் பயன்படாது, தம்மை விரும்பி அணிவாரிடத்தே சென்று பயன்தருவனவாம். அதுபோல மகளிரும் தம்மை உற்ற கணவற்கு அன்றிப் பெற்ருேர்க்குச் சிறிதும் பயன்பட மாட்டார்கள். ஆதலால் நீ கவலையடைதல் வேண்டா என உலகியல்பு கூறுவதாக அமைந்தது, சுரும்பிவர் சந்துந் தொடுகடல் முத்தும் வெண்சங்கும் எங்கும் விரும்பினர் பாற்சென்று மெய்க்கணியாம் வியன்

கங்கையென்னும் பெரும்புனல் சூடும் பிரான் சிவன் சிற்றம்பலமனைய கரும்பன மென் மொழியாரும் அந்நீர் மையர் காணுநர்க்கே. (248)

என்னும் திருக்கோவையாகும். எறித்தருகதிர்தாங்கி ' (9) எனத் தொடங்கும் பாலைக்கலியில்

பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என் செய்யும் நினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கனை யளே , எனவும்,

சீர்கெழு வெண் முத்தம் அணிபவர்க் கல்லதை நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என் செய்யும் தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கனயளே