பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 31

  • தில்லையூர நின்சேயிழையார் நவம்செய்த புல்லங்கள்

மாட்டேம் ; தொடல், விடு, நற்கலையே

(திருக்கோவை 858) என்னும் தொடராகும்.

ஏதிலாளர் இவண்வரிற் போதிற் பொம்ம லோதியும் புனையல் எம்முந் தொடா அல் என் குவெமன்னே (குறுந்-191)

எனவரும் குறுந்தொகைத் தொடர் ஈண்டு ஒப்புநோக்குதற் குரியதாகும்.

தலைவன், பரத்தையரொடுகூடிப் புனலாடி மகிழ்ந்திருந் தாகை, அவனைப் பிரிந்தமையால் சூடுவாரின்றி மலர்ச் செப்பின்கண் வைத்து மூடப்பெற்று வறிதேவைகிய பூவினை யொத்து வாட்டமுற்ற தலைமகள், இச்செயல் தலைவர்க்குத் தகாத பழிவிளைப்பதாம் என நாணி அதனைத் தோழிக்கும் புலப்படாது மறைத்திருந்தாளாக, அதுகண்ட தோழி, அவளது கற்புநலத்தினை வியந்து பாராட்டுவதாக அமைந்தது.

வேயாது செப்பினடைத்துத் தமிவைகும் வீயினன்ன தீயாடி சிற்றம்பல மனையாள் தில்லையூரனுக்கின் றேயாப் பழியென நாணி யென்கண் ணிங்ங்னே மறைத்தாள் யாயாமியல்பி வள் கற்பு நற்பால வியல் புகளே.

(திருக்கோவை-374) எனவரும் திருப்பாடலாகும். இது,

யாயாகியளே மா அ யோளே மடைமாண் செப்பிற் றமிய வைகிய பெய்யாப் பூவின் மெய்சாயினளே

தண்ணந் துறைவன் கொடுமை நம்முன் நாணிக் கரப்பாடும்மே (9)

எனவரும் குறுந்தொகைச் செய்யுளின் சொற்பொருள் நடையினை ஒத்து அமைந்துளது.

நாணத்துடன் தனித்து வருந்தும் தலைவியை நோக்கித் தோழி, பாணன் வரவு கூறுவதாக அமைந்தது,

விறலியும் பாணனும் வேந்தற்குத் தில்லையிறையமைத்த திறலியல் யாழ்கொண்டு வந்துநின் ருர், சென்றிராத் திசைபோம் பறலியல் வாவல் பகலுறை மாமரம் போலுமன்னே அறலியல் கூழை நல்லாய் தமியோமை யறிந்திலரே.

(திருக்கோவை 375)