பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 露盟器

எனவரும் மதுரைக் காஞ்சியினை நினைவுபடுத்தும் முறை யில் அமைந்துள்ளமை அறியத்தக்கதாகும்.

' வெய்யோன் தான் நுழையா இருளாய்.........

எழில்காட்டும் ஓர் கார்ப்பொழிலே (திருக்கோவை. 116) என அடிகள் பொழிலின் இயல்புகூறிய இப்பகுதி,

வெயில் நுழைபறியாக் குயினுழைபொதும்பர்

(பெரும்பாளுற்றுப்படை. 7ே4) எனவும்,

வெயிலொளியறியாத விரிமலர்த்தண்கா

(கலித்தொகை 30.7)

எனவும் வரும் தொடர்களை ஒத்துள்ளமை காணலாம்.

வெம்மைமிக்க பாலைநிலத்திலே கூரிய பருக்கைக் கற்கள் பரவிக்கிடக்கும் தோற்றம், சுடர்விட்டு எரியும் தீயின் மேற் பதிந்துள்ள கூரியவேல்களைப்போன்று அமைந்த தன்மையினை,

எரியும் தீமேல் அயில்போற் செறிபரற்கான்

(திருக்கோவை 228)

என்ற தொடரால் அடிகள் புலப்படுத்தியுள்ளார். இத்தொடர்,

அயிலுருப் பனையவாகி யைது நடந்து

வெயிலுருப்புற்ற வெம்பரல் ' (சிறுபாண் 7, 8) எனவும்,

அயில் காய்ந்தன்ன கூர்ங்கல் ' (மலைபடுகடாம் 378)

எனவும் வரும் சங்க இலக்கியத் தொடர்ப் பொருளை இனிது விளக்கும் முறையில் அமைந்திருத்தல் காணலாம்.