பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாந் திருமுறை 349

இவற்றுள் தில்லைச் சிற்றம்பலத்திற்கு மட்டும் பதிறுை திருப்பதிகங்கள் அமைந்துள்ளன. ஏனைப் பதின் மூன்று திருத்தலங்களும் ஒவ்வொரு திருப்பதிகமே பெற்றுள்ளன. இங்ங்ணம் இவ்வொன்பதாந் திருமுறையிற் பாதிக்கு மேலுள்ள பதிகங்கள் தில்லையில் அருளிச் செய்யப்பெற்றன வாகத் தெரிதலால் இவ்வொன்பதாந் திருமுறையைத் தில்லைத் திருமுறையென்றே கூறுதல் பொருந்தும்.

திருவிசைப்பா மாலையை அருளிச் செய்த ஆசிரியர்கள் திருமாளிகைத்தேவர், சேந்தனர், கருவூர்த்தேவர், நம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணுட்டடிகள், திருவாலி யமுதர், புருடோத்தமர், சேதிராயர் ஆக இவர் ஒன்பதின்மர் எனபது,

"செம்பொன்மணி யம்பலத்து நிருத்த ஞர்க்குத்

திருவிசைப்பா வுரைத்தவர் தந் திருப்பேர் சொல்லிற் பம்பு புகழ் செறிமாளிகைமெய்த் தேவர்

பரிவுடைய சேந்தனர் கருவூர்த்தேவர் நம்பிகாடவர் கோன் நற்கண்ட ராதித்தர்

நன்குயர் வேணுட்டடிகள் திருவாலியமுதர் அம்புவியோர் புகழ் புருடோத்தமர் சேதிராயர்

ஆக இவர் ஒன்பதின்மர் தாம்முறைகண் டடைவே ” எனவரும் பழைய் பாடலில் நன்கு விளக்கப் பெற்றது. இவ்வொன்பதின்மர்களுள் திருமாளிகைத்தேவர் பாடிய பதிகங்கள் நான்கும், சேந்தனர் பதிகங்கள் நான்கும், கருவூர்த்தேவர் பதிகங்கள் பத்தும், நம்பிகாடநம்பி பாடிய பதிகங்கள் இரண்டும், கண்டராதித்தர் பதிகம் ஒன்றும், வேணுட்டடிகள் பதிகம் ஒன்றும், திருவாலியமுதனுர் பதிகங்கள் நான்கும், புருடோத்தமர் பதிகம் இரண்டும், சேதிராயர் பதிகம் ஒன்றும் ஆக இருபத்தொன்பது பதிகங்கள் இவ்வொன்பதாந்திருமுறையிற் சேர்க்கப் பெற்றுள்ளன. இப்பதிகங்களிலுள்ள பாடல்கள் முந்நூற்று அறுபத்தைந்தாகுமென்பர்.

" அடைவுறு மாளிகைத்தேவர் நான்கு, சேந்தர்

அன்புறுபல் லாண்டொன்ருே டிசைப்பா மூன்று திடமுடைய கருவூரர் பத்து, வீறிற்

சிறந்த காடவ ரிரண்டு, கண்டர் வேணுடர் படி புகழொவ் வொன்று, திருவாலி நான்கு,

பன்னு புருடோத்தமனு ரிரண்டு, சேதிராயர் உடையதிருக் கடைக்காப் பொன்ருக விருபத்தொன்பான்

ஒது செய்யுள் முந்நூற் றறுபதினே டைந்தே ".