பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாந் திருமுறை 歌8

அமைந்துள்ளன என்றும் கருவூர்த் தேவர் இத்திருப் பதிகத்திற் குறிப்பிடுகின்ருர். இத்திருவுருவம், தம்மை வழி படும் அடியார்களின் சுர நோயினைத் தீர்த்தருளும் முறை யில் அமைந்ததென்றும் சாட்டியம் என்பது சுர நோயைக் குறிப்பதென்றும், சுரந் தீர்த்தருளும் பெருமான் எழுந் தருளினமையால் இத்தலம் சாட்டியக்குடியெனப் பெயர் பெற்றதென்றும் கூறுவர்.

எடுக்கின்ற பாதங்கள் மூன்றதெழுத்தைக் கடுத்தமுகமிரண் டாறுகண் ணுகப் படித்தெண்னு நாவெழு கொம்பொருநாலும் அடுத்தெழு கண்ணுன தந்தமிலாற்கே. {1030) என வரும் திருமந்திரம் இத்திருவுருவின் இயல்பினைப் புலப்படுத்துவதாகும். அடியார்களது பேரன்பினுல் அருவி போன்று இடையருது வெளிப்பட்டொழுகும் கண்ணிரே இறைவனுக்குரிய திருமஞ்சன நீரென்றும், அன்பரானவர் பருகும் ஆரமுதமாக இறைவன் இன்பந்தருகின்ரு னென்றும் இவ்வாசிரியர் கூறுவன நினைந்து மகிழத்தக்கன. முதலாம் இராசராச சோழன் கட்டிய தஞ்சை இராசராசேச்சரத் திருக்கோயிலைப் போற்றிக் கருவூர்த் தேவர் பாடிய திருவிசைப்பாத் திருப்பதிகம், நூருயிரகோடி ஞாயிறு சேர்ந்தாற் போன்று பேரொளி வீசும் சிவபெருமா னது திருமேனியின் பேரழகினையும் பழவடியார் பலர் நெடுங் காலமாகத் தொண்டு செய்து இறைவனைக் காணவேண்டுமென ஆசையால் ஏக்கற்றிருக்கவும் அப் பெருமான் தம்முடைய நெஞ்சத்தினைப் பெருங் கோயிலாகக் கொண்டு எழுந்தருளிய அருமையிலெளிய அருட்டிறத் தையும் தஞ்சை நகரத்தின் சிறப்பினையும் அங்கு எயில்சூழ அமைந்த இராச ராசேச்சரத் திருக்கோயிலில் ஆடல் பாடலில் வல்லமகளிர் நடம் பயிலுந் திறத்தினையும் இனிது விளக்குவதாகும். இதன்கண் " குடைகெழு நிருபர் முடியொடு முடிதேய்ந் துக்கசெஞ் சுடர்ப்படு குவையோங் கிடைகழி மாடத் திஞ்சிசூழ் தஞ்சை' எனவும் " உவரிமாகடலின் ஒலிசெய் மாமறுகில் உறு களிற் றரசினதீட்டம் இவருமால் வரைசெய் இஞ்சி சூழ் தஞ்சை " எனவும் வரும் தொடர்களால் அரசர் பலரும் வந்திறைஞ்ச இராசராச சோழன் தஞ்சையைத் தலை நகராகக்கொண்டு தமிழகத்தையாண்ட திறத்தினைக் கருவூர்த்தேவர் நன்கு புலப்படுத்தியுள்ளார்.