பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாந் திருமுறை 393

யேற்றுக் கறிக்குப் பயன்படுத்திக்கொள்வர். அதுபோல வெறுப்பனவே செய்யும் என் சிறுமையையும் பொறுத்து ஆட்கொள்ளுதல் பெரியோணுகிய உனது கடமையாகும் ” என இவ்வாசிரியர் கூத்தப்பெருமானை வேண்டிப் போற்றும் முறை உள்ளத்தை யுருக்குகின்றது.

தம்பானை சாயப்பற்ருர் என்பது ஒரு பழமொழி. தமக்குரிய சுற்றத்தாரது உணவுக்கு யாரும் இடையூறு செய்யமாட்டார்கள் என்பது இப்பழமொழியின் கருத் தாகும். எங்கள் பெருமானுகிய நீ வழியடியேனுகிய எனது பணியை உவந்தேற்றுக்கொள்ளாது புறக்கணித்தமையால் அப்பழமொழியும் என்னளவிற் பொய்யாய்ப் போயிற்று என்பார்,

  • தம்பான சாயப்பற்ருரென்னு முதுசொல்லும்

எம்போல் வார்க் கில்லாமை என்னளவே யறிந்தொழிந்தேன்." என்ருர், நிறைகுளம் தன் கரைக்கீழ் நின்ற கொம்புக்கு நீர் சுரத்தலியல்பு. அதுபோல் நின் கீழ்ப் பணிபுரியும் அடியோமை நின்னருளால் வளர்த்தல் வேண்டுமென்பார், * பொசியாதோ கீழ்க்கொம்பு நிறைகுளமென்றது போலத்

திசைநோக்கிப் பேழ்கணித்துச் சிவபெருமானே வெனினும் இசையாளுலென் றிறத்தும் எனையுடையாள் உரையாடாள் நசையானேன் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே' எனக் குறையிரந்து வேண்டுகின்ருர்.

" இடுவதுபுல் ஓரெருதுக்கு ஒன்றினுக்கு வையிடுதல் ” என்பது, இணையொத்துத் தொழில் செய்யும் இரண்டெருது களுள் ஒன்றிற்குப் புல்லிடுவதும் மற்ருென்றுக்கு வைக்கோ லிடுவதும் நடுவுநிலைமை ஆகாமைபோல, ஒருவரது நடுவு நிலைமையற்ற செயலைக் குறித்து வழங்கும் பழமொழி யாகும். எல்லா வுயிர்களையும் அடிமையாகவுடைய இறை வன் அகத்திய முனிவர்க்கு ஞான நூல்களை யறிவுறுத்துவ தும் என்போல்வாரைப் புறக்கணிப்பதும் இப்பழமொழிக் குரிய செயலாகாதோ என வினவுவது போன்று,

படுமதமு மிடவயிறுமுடைய களிறுடையபிரான் அடியறிய வுணர்த்துவதும் அகத்தியனுக் கோத்தன்றே இடுவது புல்லோரெருதுக் கொன்றினுக்கு வையிடுதல் நடுவிதுவோ திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. எனப் பரிந்து வேண்டும் குறிப்பு படிப்போருள்ளத்தை யுருக்குவதாகும்.