பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4?& பன்னிரு திருமுறை வரலாறு

இறைவன் தன்னின் வேறல்லாத எண்குணமுடையதைல், தன்னின் வேருகிய பசு பா சங்களை யுடை யணுதல் முதலிய தன்மைகளைத் தான் உணருமாறும் பிறர்க்கு உணர்த்து மாறும் விளங்க அறிவுறுத்துவதாகும்.' இனி, சாத்திரங் களை முன்னெடுபின் மலவறக் கொள்ளுகிறது தந்திர கலையாம் என்றும், கணங்களுடைய வியாபாரங்களை அடக்கி அவரவர் தங்களுக்கு வேண்டின தெய்வங்களை அந்தந்த மந்திரங்களினலே வழிபடுகிறது மந்திர கலையாம் என்றும், தனக்கு முதலும் முடிவுமில்லாத பரமேசுவர னுடைய சிவஞானத்தைப் பக்குவான்மாக்களுக்குப் போதிப்பது உபதேசகலையாம் என்றும் ஞானகாண்டம் ஒன்றே பற்றி இம் மூவகைக் கலைகளின் இலக்கணங்களைப் பகுத்துரைத்தலும் ஏற்புடையதேயாகும். ஆகமங்களுக்கு அங்கமாகிய இம் மூவகை உரையளவைகளையும்,

அளுதியே யமலஞய அறிவனு லாகமந்தான் பின தி மாறின்றிப் பேணல் தந்திரம், மந்திரந்தான் மனுதிகள் அடக்கித் தெய்வம் வழிபடும் வாய்மை பாகும், தளுதி பீறிலான்றன் தன்மை யுணர்த்துதல் உபதேசந்தான். சித்தியார்-சுபக்கம்-13) எனவரும் திருவிருத்தத்துள் அருணந்தி சிவாசாரியார் சுருக்கமுந் தெளிவும் பொருந்த விளக்கியுள்ளார்.

மேற்குறித்த தந்திரம், மந்திரம், உபதேசம் எனப்படும் மூவகை உரைத்திறங்களும் ஒருங்கமைந்த செந்தமிழ்ச் சிவாகமமாகத்திகழ்வது, திருமூல நாயனர் அருளிய இத் திருமந்திரமாலையாகும். தந்திரம், மந்திரம், உபதேசம் எனப்படும் மூன்றனுள் நடுவே நின்ற மந்திரம் என்பது. முன்னுள்ள தந்திரத்தோடும் பின்னுள்ள உபதேசத் தோடும் பிரிவின் றியியைந்த தொடர்பினதாகிய தலைமை பற்றித் திருமூலர் இறைவன் திருவருளாற் சிந்தைசெய்து அருளிய இத் தமிழாகமத்தை மந்திரமாலை எனக் குறித் துள்ளார். தமிழ் மூவாயிரமாகிய இத் திருமந்திரப் பாடல் கள் ஒன்பது தந்திரங்களாக வகுக்கப் பெற்றன என்பது,

1. சிவஞான சித்தியார், சுபக்கம். பிரமாண இயல் 13. சிவஞான முனிவருரை.

2. டிெ நிரம்ப அழகிய தேசிகர் உரை.

8. திருமந்திரம் 88.