பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரமும் மெய்கண்ட நூல்களும் 蠱8器

எனவரும் திருமந்திரத் தொடர்ப் பொருளே விளக்கும் முறையில் அமைந்திருத்தல் காண்க.

பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் அறியப்படுவ தாய் அழியுந்தன்மைத்தாகிய பிரபஞ்சத்தை அசத்து எனவும், அழிவின்றி என்றும் உள்ளதாய்ப் பதிஞானம் ஒன்றிஞலேயே அறியப்படும் பரம்பொருளைச் சத்து எனவும், சிவசத்து ' எனவும், சத்தினைச் சார்ந்த நிலையிற் சத்தாகவும் அசத்தினைச் சார்ந்த நிலையில் அசத்தாகவும் நின்று அவ்விருதிறப்பொருளையும் அறியுந்தன்மைத்தாகிய உயிரைச் சதசத்து எனவும், அறிவே உருவாகிய பரம் பொருளைச் சித்து எனவும், அறிவற்றதாகிய பாசத்தை அசித்து எனவும் குறியிட்டு வழங்குதல் சைவசித்தாந்த நூன்மரபாகும்.

சத்தும் அசத்தும் சதசத்துந் தான்கண்டு சித்தும் அசித்துஞ் சேர்வுரு மே நீத்த சுத்தம் அசுத்தமும் தோய்வுரு மேநின்று நித்தம் பரஞ்சுத்த சைவர்க்கு நேயமே. (1420) சத்தும் அசத்தும் சதசத்துந் தான் கூடிச் சித்தும் அசித்தும் சிவசத்த தாய் நிற்கும் சுத்தம் அசுத்தம் தொடங்காத் துரியத்துச் சுத்தரா மூன்றுடன் சொல்லற் றவர்களே. (2328) தரனே யறியான் அறிவிலோன் தானல்லன் தானே யறிவான் அறிவு சதசத்தென் ருளுல் இரண்டும் அரனரு ளாய் நிற்கத் தானே யறிந்து சிவத்துடன் தங்குமே. (2329) எனவரும் திருமந்திரப் பாடல்களில் மேற்காட்டிய குறியீடு கள் இடம் பெற்றிருத்தல் காணலாம்.

உ ைருரு அசத்தெனின் உனரா தின் மையின் இருதிற னல்லது சிவசத் தாமென

இரண்டு வகையின் இசைக்கு மன்னுலகே

(சிவஞானபோதம் சூ-6)

எனவும்,

'யாவையுஞ் சூனியஞ் சத்தெதி ரா கலிற்

சத்தே யறிய தசத்தில தறியா திருதிறன் அறிவுள திரண்டலா ஆன்மா (ഒക്ട-രൂ-7) எனவும் வரும் சிவஞானபோத நூற்பாக்கள் மேற்குறித்த திருமந்திரப் பாடல்களில் உள்ள குறியீடுகளையும் இலக் கணங்களையும் அடியொற்றியமைந்திருத்தல் ஈண்டு ஒப்பு நோக்கி யுணரத்தக்கதாகும். -