பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498

பன்னிரு திருமுறை வரலாறு


எனவும் வரும் மெய்கண்ட நூற் செய்யுட்கள்,

விஞ்ஞானர் நால்வரு மெய்ப்பிரளயாகலத் தஞ்ஞானர் மூவருந் தங்குஞ் சகலத்துள் அஞ்ஞானர் மூவரு மாகப் பதின்மராம் விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே. (493) மும்மலங் கூடி முயங்கி மயங்குவோர் அம்மெய்ச் சகலத்தர் தேவா சுரர் நரர் மெய்மையின் வேதா வரிமிகு கீழந்தத் தம்முறை யோனிபுக் கார்க்குஞ் சகலரே. (2244)

எனவரும் திருமந்திரப் பாடல்களின் பொருளை மேற் கொண்டு கூறுவனவாகும்.

வேதம் சிவாகமம் என்னும் இருதிற நூல்களும் சிவ பெருமானுல் அருளிச் செய்யப்பெற்ற முதல்நூல்கள் என வும், வேறுரைக்கும் எல்லா நூல்களும் இவற்றை முதலாகக் கொண்டு இயற்றப்பட்ட வழிநூல்கள் எனவும், வேதம் உலகத்தார் உய்தற்பொருட்டுப் பொதுநூலாகவும் சிவா கமம் சத்தி நிபாதர் உய்தற்பொருட்டுச் சிறப்பு நூலாகவும் அருளிச் செய்யப் பெற்றன எனவும் அறிவுறுத்து முறை யிலமைந்தது,

வேதநூல் சைவ நூல் என்றிரண்டே நூல்கள்

வேறுரைக்கு நூ லிவற்றின் விரிந்த நூல்கள் ஆதிநூல் அநாதி யமலன் தருநூ லிரண்டும்

ஆரண நூல் பொது, சைவம் அருஞ் சிறப்பு து லாம் நீதியினுல் உலகர்க்கும் சத்திநி பாதர்க்கும்

நிகழ்த்தியது, நீண்மறையி குெழி பொருள் வேதாந்தத் தீதில்பொருள் கொண்டுரைக்கும் நூல் சைவம், பிறநூல்

திகழ்பூர்வம், சிவாகமங்கள் சித்தாந்தமாகும். (267) எனவரும் சிவஞான சித்தியாராகும். இது,

வேதமோ டாகமம் மெய்யாம் இறைவ னுால் ஒதும் பொதுவுஞ் சிறப்புமென் றுன்னுக நாத னுரையிவை நாடி லிரண்டந்தம் பேதம தென்னிற் பெரியோர்க் கபேதமே. (2397) என்னும் திருமந்திரப் பொருளை விரித்துரைக்கும் முறையில் அமைந்ததாகும்.

சித்தாக்கத்தே சிவன்றன் திருக்கடைக்கன் சேர்த்தி:

செனன மொன்றிலே சிவன் முத்தராக வைத்தாண்டு மலங்கழுவி ஞான வாரி

"ச்ேசனக் கம் பொழிந்து வரும் பிறப்பை யறுத்து