பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்காலம்மையார் 链复

வானவருலகும் எண் திசைகளும் சிதர்ந்தழிவன. நீ திரு நடம் புரிந்தருளுதற்கு நிலக்களமாய் விளங்கும் இவ்வுலக மாகிய அரங்கம் நினது திருக்கூத்தினைப் பொறுத்தற் கேற்ற வலியுடையதன்று. ஆகவே இதன் வலியின் மை யறிந்து குறிக்கொண்டு ஆடுவாயாக என அம்மையார் இறைவனை நோக்கிக் கூறும் அன்புரைகள், இறைவனது, திருமேனியைத் தாம் காண்பதுடன் உலகத்தார்க்குங் காட்டுதல் வேண்டுமென்னும் பேரார்வத்தையும், கூடும் அன்பிற் கும் பிடலேயன்றி வீடும் வேண்டாவிறலின் விளங்கிய அம்மையாரது திருத்தொண்டின் திறத்தையும் இறைவனது பெருந்திருக்கூத்தின் இயல்பினையும் இனிது புலப்படுத்து வனவாகும்.

அகக்கண் ணுல் தன்னைச் சிந்தித்துக் காண வல்ல தவச்செல்வர்களுக்கு அவர்கள் உள் ள த் து ஸ் ேள பேரொளிப் பிழம் பாகத் தோன்றியருள்புரிதல் இறைவனது இயல்பாகும். அப்பெருமானைப் பு ற த் தே கண்களாற் கண்டு மகிழவேண்டுமென விரும்புவார் க்கும் அவர்கள் விரும்பிய வண்ணமே எதிர்தோன றிக் காட்சியளிக்க வல்ல எளிமைத் தன்மை வாய்ந்த அருளாளன் அவன். அவனைக் கைதொழுது போற்றும் மெய்யடியார்களுக்கு அவனது திருவுருவத்தைக் காணுதல் இயலும் அறியும் இயல்புடைய ஆன்மாவேயாய் ஒற்றித்து நிற்பவனும் அவனே. அங்ங் ைம் உயிர்களோடு வேறறக் கலந்து நிற் பினும் உயிர்களாகிய அவற்றின் தன்மை தனக்கெய்த லின்றித் தான் அவற்றின் வேரு நின்று அவ்வுயிர்களுக் குப் பொருள்களின் இயல்பினை உள்ளவாறு அறிவித்தருள் பவனும் அவனே கண்களுக்குப் பொருள்களின் இயல் பினை உள்ளவாறு காட்டித் தானும் உடனின்று காணும் உயிர் போல, உயிர்களுக்குப் பொருளின் இயல் பினை அறி வுறுத்தி அவற்ருேடு பிரிப்பின்றி உயிர்ககுயிராய் உட னிருந்து அறிந்து உதவி செய்பவனும் அவ்விறைவனே. உயிர்கள் இடைவிடாது சிந்தித்துத் தெளிந்து போற்றுதற் குரிய நிலைத்த உண்மைப் பொருளாக விளங்குபவனும் அவனே. ஒளிதரும் சுடர்ப்பொருள்களும் நிலனும் வானு மாகிய உலகியற் பொருள்களோடு விர வி நின்று உலகத்தை இயக்கி நிற்பவனும் அவனே. பிறரால் அறிந்துகொள்ள

1. அற்புதத்-20.