பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் நாயனுக் 30

பரத்தையர்கள் தலைவனை அகப்படுத்தற் பொருட்டு விரித்த வலையாகவும் தோன்றி வஞ்சனை மொழிகள் பலவற்றை அடுத்தடுத்துரைத்து உள் ளக் கருத்தினை யுணராதபடி மறைத்துக்கொண்டு கள்வனைப் போல விழி த் து க் கைகளால் தொழுது வணங்கி நீ எமது மனை வாயிலில் நிற்கின்ருய். நின்னை இங்குத் துனதாக அனுப்பிய தலைவனேவெனில் தேவர்களால் அறியப்படாத முழுமுதற் கடவுளும் முருகனுக்குத் தந்தையும் ஆகிய இறைவன் வீற்றிருந்தளுந் திருவாரூர்க் கடைவீதியில் அமைக்கப் பட்டுள்ள வனப்புமிக்க கண்ணுடி தனக்குரிய தன்மை யென்பதொன்று மின்றித் தன்னெதிர்ப்பட்ட பொருளின் தன்மையுடையதாய் விளங்குதல் போலத் தனக்குரிய இயல்பு ஒரு சிறிதுமின்றிப் பண்ணுடைச் சொல்லியராகிய பரத்தையர் தன்மையனுய் அவர் கருத்தின்வழி யடங்கி ஒழுகுகின்ருன். இந்நிலையில் நின்னுடைய வாய்மை போலும் பொய்மொழிகளை யாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தோழி பாணனைச் சினந்து கூறு கின்ருள். இதன் கண் சேவற் குருவி கருமுற்றிய தனது பேடைக்கு ஈனில் (கருவுயிர்க்கும் அறை) அமைத்துப் பாதுகாத்தலைப் போன்று தன் காதலி கருவுயிர்த்தற்கு முன்னரே வேண்டுவன செய்து மனைவயிற்றங்கிப் பாது காத்தற்குரிய தலைவன், உரிய காலத்தில் தான் செய்ய வேண்டிய கடமையை மறந்தது மன் றிப் புறத்தொழுக்கிற் சென்று தன் காதலிக்கு மேலுந் துன்பம் விளைக்கின்ருன் இது நன்ருமோ? எனத் தோழி தலைவனது புறத்தொழுக் கினைக் குறிப்பால் இகழ்ந்துரைத்தல் காணலாம். வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தோழி சொல்லி வாயில் மறுத்ததாகக் குறுந் தொகையிலமைந்த

யாரினு மினியன் பேரன் பினனே உள்ளுர்க் குரீஇத் துள்ளு நடைச் சேவல் சூன் முதிர் பேடைக் கீனி லிழைஇயர் தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின் நாரு வெண் பூக் கொழுதும் யாண ருரன் பாணன் வாயே.

என்ற பாடற் பொருளை இச்செய்யுள் அடியொற்றி

அமைந்துள்ளது. இவ்வாறே இத் திரு மும்மணிக்கோவை யில் வரும் திருப்பாட்டுக்கள் பலவும் சங்கத் தொகை