பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமான் பெருமாள் நாயகுர் 607

இவ்வாறு இறைவனது பொருள் சேர் புகழை யெடுத் துரைத்துப் போற்றி மலர்துவி வழிபடுகின்றனர். இடபக் கொடியும் பிறகொடிகளும் குடையும் தொங்கலும் சூழ்ந்து தோன்றுகின்றன. பூவணிந்த கரிய கூந்தலையுடைய மகளிரது உள்ளத்தே மேன்மேலும் முதிர்ந்து தோன்றும் பேரன்பினைப் புதிதுண் ண வேண்டித் தாவும் மானைத் தாங்கிய சிவபெருமான் இங்ங்ணம் உலாவருகின்ருன்,

இத்திருவுலா ஆரவாரத்தைக்கேட்ட அளவில் மாட நடுவில் வாழ்பவராகிய பேதைமுதலாகப் பேரிளம் பெண் ஈருகவுள்ள ஏழு பருவத்து மகளிரும் தம்மைப் பல்வகை யணிகளாற் கோலஞ்செய்துகொண்டு மாளிகையின் மேலும் தெருவிலும் எம்மருங்கும் கூட்டமாகக் குழுமி நின்று இறைவனது பேரழகில் ஈடுபட்டு மயங்கி அப்பெருமான் பால் கண்ணென்னும் பெருவலையை வீசித் தம் உள்ளத்து நிறையென்னும் கதவின்தாளைத் திறந்திட்டார்கள்.

அவருள், வெண் மணலாற் சிறு சோறமைத்து விளை யாடுமியல்புடைய பேதைப் பருவத்தின ளாகிய பெண் ஒருத்தி தன் உடல் வளர்ச்சியாலும் நடை யுடை சொல் கோலம் முதலியவற்ருலும் மைந்தரது மனங்கவரும் பக்குவமில்லாதவள். வாயொன்று சொல்லக் கையொன்று செய்ய மனமொன்று நினைக்க நிகழும் விளையாட்டுப் பருவத் தினள். அவள் தாலியைக் கழுத்திலணிந்து சந்தனத்தை உடம்பிற்பூசி நீலச்சிற்ருடையை விரித்துடுத்துக்கொண்டு பாவையொன்றை வைத்து விளையாடுகின்ருள். அவளை நோக்கி இப்பாவைக்குத் தந்தையாவார் யாவர் என ஒருத்தி வினவினுள் . இப்பாவைக்குத் தந்தையாவான் சிவபெருமானே என்ருள் தாய். அம்மொழியைக் கேட்ட இவள், இறைவன் இடபத்தின் மேலெழுந்தருளி வருதலைக் கண்டு காமநூலாகிய கலையினை இதற்கு முன் உணரப் பெருதவள் இப்பொழுது சிறிது உணரத் தொடங்கினுள். பேரெ வளிசேர்காட்சிப் பெதும்பைப் பருவத்தினளாகிய பெண்ணுெருத்தி, தோழியரும் தானுமாய்த் தூய வெண்

1. பேதை ஐந்துமுதல் ஏழாண்டு வரையுள்ள பருவமுடைய பெண்.

2. பெதும்பை - எட்டாண்டு முதல் பதினேராண்டு வரையுள்ள பருவத்தினளாகிய பெண்.