பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/630

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

614

பன்னிரு திருமுறை வரலாறு


தமிழ்ப் புலவராகத் தோன்றி அன்பினைந்திணை யெனத் தொடங்கும் அகப்பொரு எளிலக்கண நூலே இயற்றியளித் தார். தாம் பாடிய அகத்தினைப் பாடல்கள் யாவும் இறைவர் இயற்றிய அகப்பொரு விலக்கணத்தின் படி அமைந்திருத்தலை யறிந்து சங்கப் புலவர்கள் மகிழ்ச்சியுற் ருக்கள். அவர்களில் ஒருவராகிய நக்கீரனர் மட்டும் அழுக் காறு டையராய் அதனை க் குறை கூறினர். அதனை யறிந்த இறைவர் சிரித்து, இந் நக்கீரன் என்றுமே பொருமை யுடையவன் என்பதை இங்குள்ளவர்களில் அறியாதார் யாவர் ? நக்கீரன் உண்மை உணர்ந்து அமைதியுறுதற்கு வேண்டும் அறிவுரைகளைப் புலவர்களாகிய நீங்களே அவ னுக்குச் சொல்லுங்கள் ' எனக் கூறியருளினர். அப் பொழுது விசும்பிலே ஓர் அருள் வாக்குத் தோன்றியது. 'சங்கப் புலவர்களே, நுமக்குள் தமிழ் மொழியின் இலக் கண அமைதி குறித்துத் தோன்றிய வழக்கினைத் தீர்த்தற் பொருட்டுத் திருவாலவா யிறைவகிைய சிவபெருமானே இவ்வாறு நும்முன் புலவகை எழுந்தருளியுள்ளான். நுமது அறியாமையை விடுத்து அப்பெருமானைப் பணிந்து போற்றுமின் என விசும்பிடைத் தோன் றிய அருள் மொழி யினைக் கேட்டு அச்சமும் வியப்பு மெய்திய நக்கீரர், அடி யேன் அறியாது கூறிய பிழையுரைகளைப் பொறுத்தருள வேண்டும் ' எனக் கூறிப் புலவராய் வந்த இறைவனைப் பணிந்து போற்றினர். இறைவனும் சங்கப் புலவர்களுக்கு அருள் செய்து மறைந்தருளினுன்.

மதுரை நகரின் கண் அரசு வீற்றிருக்கும் பாண்டிய மன்னன் தன் தேவியொடும் தனித்து உலவிய பொழுது அவளது கூந்தலிலிருந்து தோற்றிய நறுமணத் தினை யுணர்ந்தான். அந்நறுமணம் பூவோடியைந் தமையாற் கூந்தலுக்குளதாகிய செயற்கை மணமோ அன்றிக் கூந்த லின் இயல் பாகிய மணந்தானே என்பதோர் ஆராய்ச்சி அவன் மனத்திடையே நிக் பெறுவதாயிற்று. யான் என் மனத்திற் கொண்ட பொருளைக் குறிப்பானுணர்ந்து அழகிய செய்யுளொன்று பாடித்தருவோர் யாவராயினும் அவர்கள் பெறுதற்குரியது இப் பெ ற்கிழி யென்று சொல்லி ஆயிரம் பொன் னிறைந்த கிழி யொன்றைச் சங்க மண்டபத்தே வேந்தன் கட்டி வைத்தனன். பெரும் புலவர்

பலரும் அரசனது உள் ளக் கருத்தினை யறிய முயன்று