பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/667

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயஞர் బీఏ3

அறியாமல் இரவில் நுழையும் இத்தென்றல் களவொழுக்க முடையதாக இருத்தல் வேண்டுமெனக் கருதிய ஆசிரியர்,

வளர்ந்த விளங்கன் னி மாங்கொம் பின் கொங்கை அளேந்து வடுப்படுப்பான் வேண்டி-இளந்தென்றல் எல்லிப் புக நுழையும் ஈங்கோயே தீங்கருப்பு வில்லிக்குக் கூற்ருனுன் வெற்பு,

எனவரும் பாடலால் அதன் களவினைப் புலப்படுத்துகின்ருர், இதன் கண் வளர்ந்த இளங்கன்னி மாங்கொம்பின் கொங்கை அளந்து வடுப்படுப்பான் வேண்டி என்ற தொடர், களவொழுக்கத்தில் இரவுக் குறியில் வந்தொழு கும் தலைவனுக்கும், இளவேனிற் பருவத்தில் மாம்பொழிலி னிடையே நுழையும் இளந்தென்றலுக்கும் பொருந்தும் வண்ணம் இருபொருள் தருவதாக அமைந்துளது. இத் தொடர் தலைவனுக்குச் சொல்லுங்கால் பருவமுடையளாய் வளர்ந்த இளங்கொம்பு போல்வாளாகிய கன்னிமை நீங்கா இளநங்கையின் ஆகத்தைச் சேர்ந்து மகிழ விரும்பி என வும், தென்றலுக்குச் செல்லுங்கால் நன்ருய் வளர்ந்து முதன் முதல் பூத்த முதிராத இளைய மாமரத்தின் கிளையில ரும்பிய பூக்களிலுள்ள மகரந்தப் பொடியினை ஒன்றி னென்று கலக்கச் செய்து அப்பூவினை மாவடுவாகக் கருக்கொள்ளச் செய்ய வேண்டி என வும் இருவேறு பொருள்களைத் தந்து நிற்கிறது. கொங்கை அளைந்து என்னுந் தொடர் தலை வனுக்குக் கூறுங்கால் ஆகத்தைத் தழுவி ' என இரண் டாம் வேற்றுமைத் தொகையாகவும், தென்றலுக்குக் கூறுங்கால் கொங்கினை (மகரந்தப் பொடியைக்) கலக்கச் செய்து என்னும் பொருளில் இரண்டாம் வேற்றுமை விரியாகவும் கொள்ளுதல் வேண்டும். முன்னதற்கு கொங்கையென்பதே பெயராகவும் பின்னதற்குக் கொங்கு என்பது பெயராக ஐ இரண்டாம் வேற்றுமையுருபாகவும் அமைந்தமை கருதற்குரியது. வடுப்படுத்தல் என்னுஞ் சொல் முறையே நகக்கு றி செய்தலையும், பூவை மாவடு வாகச் செய்தலையும் குறிப்பதாகும். இளையோ ளுெருவன் தன் காதலையுணர்ந்து மகிழும் பருவமுடையளாய் வளர்ந்த கன்னியொருத்தியின் ஆகத்தைச் சேர்ந்து இன்புறும் உள்ளத்தணுய்ப் பிறரறியாதபடி இரவுக் குறியில் வந்து பெயர்தல் குறிஞ்சி நிலத்துக்குரிய களவொழுக்கமாகும். மலைநிலத்திற்கே சிறப்புரிமையுடைய இக்களவொழுக்