பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/676

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

660

பன்னிரு திருமுறை வரலாறு


எனவே தெய்வத்தை முன்னிலையாகச் சொல்லப்பட்டன அன்றி அல்லன தேவபாணியெனத் தகா என்பது அவர் கருத்தாதல் இனிதுபுலனும், தேவபாணியாகிய இஃது இயற்றமிழில் வருங்கால் கொச்சக வொரு போகாய்ப் பெருந்தேவபாணி சிறுதேவபாணியென இருவகைத்தாய் வருமென்றும், அங்ங்ணம் வரும் தரவினை நிலையென வடக்கி முகத்திற்படுந் தரவினை முகநிலையெனவும் இடை நிற்பன வற்றை இடைநிலையெனவும் இறுதியில் நிற்பனவற்றை முரிநிலையெனவும் பரவுதற்பொருண்மையாற் செய்யுள் இயலின் கண் பெயர் கொடுத்தாரென்றும், அடியார்க்கு நல்லார் கூறுவர். இசைப்பா இசையளவுபா என்னும் இரு பகுதியுள் இத்தேவபாணி இசைப்பாவின் பகுதி யென்றும், செந்துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறுதேவபாணி, முத்தகம், பெருவண்ணம், ஆற்றுவரி, கானல்வரி, விரிமுரண், தலைபோகுமண்டிலம் G矿@雷 இசைப்பா பத்துவகைப்படுமென்றும் கூறுவர் ஒருசா ராசிரியர்,

செந்துறை வெண்டுறை தேவபாணிய்யிரண்டும் வந்தன முத்தகமே வண்ணகமே-கந்தருவத் தாற்றுவரி கானல் வரிமுரண் மண்டிலமாத் தோற்று மிசையிசைப்பாச் சுட்டு ' என்ருர் இசை நுணுக்கமுடைய சிகண்டியார் . இனி சுத்தம் சாளகம் தமிழ் என னுஞ் சாதியோசைகள் மூன்றினுடனும் கிரியைகளுடனும் பொருந்தும் இசைப்பாக்கள் சிந்து, திரிபதை, சவலை, சமபரத விருத்தம், செந்துறை, .ெ வ ண் டு ைற, பெருந்தேவபாணி, சிறுதேவபாணி, வண்ணம் என ஒன்பது வகைப்படு மென்றலும் உண்டு.

செப்பரிய சிந்து திரிபதை சீர்ச்சவலை தப்பொன்று மில்லாச் சமபாத்-மெய்ப்படியுஞ் செந்துறை வெண்டுறை தேவபாணி வண்ணமென்ப பைந்தொடியாய் இன்னிசையின் பா. என்ருர் பஞ்சமரபுடைய அறிவஞர்.

இத்தேவபாணி இயற்றமிழிலக்கணத்தின்படி கலிப்பா வகையைச் சார்ந்தனவென்பது, ஏனையொன்றே, தேவர் ப் பராஅய முன்னிலைக்கண்னே’ எனவருஞ் செய்யுளியற் சூத்திரத்தானும், ஏனையொன்று எனப்பட்ட தேவபாணி ஒத்தாழிசை' எனவும், 'வெண்பாவினன் முடியுங் கொச்சக