பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/691

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நககிர தேவ நாயஞர் 密常器

தொடர் திருமாலிருஞ் சோலையைமட்டுங் குறித்ததெனக் கொள்ளாமல் இழுமென இழிதரும் அருவியையுடைய வளமார்ந்த எல்லாமலேகளையுங் குறித்து நின்றதெனக் கொள்ளுதலே ஆசிரியர் கருத்துக்கு ஏற்புடையதாகும். பழமுதிர்சோலை மலைகிழவோன் ' என உடம் பொடு புன்ர்த்தமையால் பழமுதிர்சோலைமலையின் கண்ணே எழுந் தருளி யிருத்தலும் உரியன் ' எனப் பொருள்கொண்டு இதனை ஒரு தனித்திருப்பதியாகக் கொள்வார்க்கும் இத்திருமுருகாற்றுப்படையிற் சிறப்பிக்கப்பெற்ற திருத் தலங்கள் ஐந்தெனக் கொள்வதன்றி ஆறுபடைவீடெனக் கொள்ளுதறகுச் சிறிதும் இடமில்லையென்பது திருமுரு காற்றுப்படையை முறையே ஒதுவார்க்கு இனிது விளங்கும்.

திருமுருகாற்று படையினை இயற்றிய ஆசிரியராவார் மதுரைக்கணக்காயஞர் மகளுர் நக்கீரனுர் ' எனப் பத்துப் பாட்டுரையில் உரையாசிரியர் நச்சினுர்க்கினியர் தெளி வாகக் கூறியுள்ளார். கடைச் சங்கப் புலவராகிய இவரே பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுத் தலைவனுகக் கொண்டு நெடுநல்வாடை யென்ற பாடலையும் பாடியுள்ளா ரென்பது பத்துப்பாட்டுளொன்ருகிய அதற்கு நச்சிஞர்க் கினிய ரெழுதிய வுரைப்பகுதியில் பாண்டியன் நெடுஞ் செழியனை மதுரைக்கணக்காயனர் மகளுர் நக்கீரனுர் பாடிய நெடுநல்வாடை" என வருந்தொடரால் இனிது விளங்கும். பத்துப்பாட்டுள் முதலாவதாகிய திருமுருகாற்றுப் படையிலும் ஏழாவதாகிய நெடுநல்வாடையிலும் முறையே பேரின்பமாகிய வீடுபேற்றினையும் சிற்றின்பமாகிய உல கியல் வாழ்வினையும் நாடி வாழ்ந்த இருவேறு மனநிலை புலப்படுதலாலும் இவ்விருபாடல்களிடையே மொழிநடை முதலியன சிறிது வேறுபாட்டிருத்தலாலும் இப்பாடல்கள் இரண்டும் ஒரு புலவராற் பாடப்பெற்றிருத்தல் இயலா தென்றும், நெடுநல்வாடையை இயற்றிய நக்கீரனரென் பவர் கடைச்சங்க காலத்திலும் திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீர குரென்பவர் கி. பி. ஐந்தாம் நூற்ருண்டிலும் வாழ்ந்தவரெனக் கொள்ளுதலே ஏற்புடையதாமென்றும் அறிஞரொருவர் ஆராய்ந்தெழுதியுள்ளார்.'

1. திருமுருகாற்றுப்படை உரையாசிரியருரையுடன் முன்னுரை (மதுரைச் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்ப் பிரசுரம்-68.) பார்க்க,