பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 器?

திருவாதவூரடிகளுக்கு உபதேசம் நிகழ்ந்த பின்னரே திருப்பெருந்துறையிற் கோயில் அமைக்கப் பெற்றதென்றும், வாதவூரடிகளுக்கு உபதேசம் புரிந்தருளிய அருள் நிலையமாக இப்பொழுதுள்ள பெருந்துறைக் கோயிலில் சிவலிங்கத் திரு வுருவமும் ஏனைய அங்கங்களும் அமைந்தில்லாமையே அடிகள் காலத்திற்கு முன் அங்கே திருக்கோயில் இல்லாமை யைப் புலப்படுத்துமென்றும் மறைமலையடிகள் கருதுவர்.

செந்தழல் புசைதிரு மேனியுங் காட்டித்

திருப்பெருத் துறையுறை கோயிலுங் காட்டி அந்தன. குவதுங்காட்டி வந்தாண்டாய் '

என வரும் வாதவூரடிகள் வாய்மொழி, அடிகள் குருவின் திரு மேனியைக் காணுதற்கு முன்னரும் திருப்பெருந்துறையிற் சிவபெருமானுக்குத் தனிக் கோயில் உண்டு என்ற குறிப்பை வற்புறுத்தல் காணலாம். ஆரூர் மூலட்டானம் எனத் தொடங்கும் கூேடித்திரக் கோவைத் திருத்தாண்டகத்தில்,

பெருந்துறை காம்பீலி பி.ஆர் .

எனக் குறித்துப் போற்றப் பெற்ற பெருந்துறை யென்னும் வைப்புத்தலம் இத் திருப்பெருந் துறையெனக் கருதுதற்கும் இடமுண்டு. இக்காலத்தில் ஆளுடையார் கோயில் என வழங்கும் திருப்பெருந்துறையின் ஒரு பகுதியாய வடக்கூரில் வெள்ளாற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஆதிகைலாச நாத சுவாமி கோயில் பழைய திருப்பெருந்துறைக் கோயிலாக இருத்தல்வேண்டுமெனத் தோன்றுகின்றது.

சிவபெருமான் திருப்பெருந்துறையிற் குருந்த மர நீழ லிற் குருவாய் எழுந்தருளியபோது தமது திருக்கரத்தில் சிவ ஞான போதம் என்ற நூலை வைத்திருந்தார் எனப் பரஞ் சோதி முனிவரும், அந்நூற் பொருளை வாதவூரடிகளுக்கு உபதேசித்தார் எனக் கடவுள் மாமுனிவரும் கூறுவர். கி. பி. 13-ம் நூற்ருண்டில் மெய்கண்ட தேவரால் இயற்றப் பெற்ற சைவ சித்தாந்தத் தனிமுதல் நூல் சிவஞான போத மென்னுஞ் செந்தமிழ் நூலாகும். இப்பெயருடைய நூலொன்று திருவாதவூரடிகள் காலத்தில் வழங்கிய தென்ப தற்கு எத்தகைய சான்றும் கிடைக்கவில்லை. திருப்பெருந் துறையில் ஆசிரியத் திருமேனி கொண்டு தோன்றிய இறை பன், திருவாதவூரர்க்கு அறிவுறுத்தியது, திருவைந்தெழுத் துபதேசமெனவே பெரும்பற்றப் புலியூர் நம்பி தெளிவாகக்