பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/812

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

796

பன்னிரு திருமுறை வரலாறு


இறைவன் அருளிய உலகெலாம் என்ற சொல்லையே முதன் மொழியாகக் கொண்டு திருத்தொண்டர் புராண மென்னுந் தெய்வத்தமிழ்ப் பெருங்காப்பியத்தைப் பாடி முடித்தார்.

நூல் இனிது நிறைவேறிய திறத்தைக் கேள்வியுற்ற சோழ மன்னன் தில்லைப்பதியை யடைந்தான். சேக்கி ழாரும் தில்லை வாழந்தணர்களும் தவச்செல்வரும் மன்னனை எதிர் கொண்டழைத்தார்கள். அருண்மொழித் தேவருடைய சிவவேடப் பொலிவழகை நேரிற்கண்ட மன்னன், அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கித் தில்லையம்பல முன்றிலில் வந்து நின்ருன். அந்நிலையில் " வளவனே, நாம் நம் வாக்கினுல் உலகெலாம் என்று அடியெடுத்துக்கொடுக்கச் சேக்கிழான் நம்முடைய தொண்டர்களது அடிமைத் திறத்தை விரித்து நூலாகச் செய்து முடித்தான். நீ அதைக்கேட்பாயாக ' என்றதொரு வானெலி திருச்சிலம்பொலியுடன் யாவரும் கேட்பத் தோன்றியது. அதனைக்கேட்டு வியப்புற்ற அரசன், திருத் தொண்டர் புராணத்தைக் கேட்க வரும் பொருட்டுச் சிவனடியார்கள் எல்லோர்க்கும் திருமுகம் அனுப்பினுன். திருமுறைகளில் வல்லவர்களும் சிவாகமங்களைக் கற்றவர் களும் வேதங்களில் வல்லவர்களும் இலக்கண இலக்கியங் களே நுனித்துணர்ந்த புலவர் பெருமக்களும் தில்லையை அடைந்தார்கள். தில்லையம்பலவாணர் திருமுன்னர்த் திருத்தொண்டர்புராண விரிவுரை நிகழ்தற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் குறைவறச் செய்யப்பட்டன. அருள் நடம் புரியும் நடராசப் பெருமானுக்குரிய சிறப் புடையதும்,சீகாழிப்பதியில் திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருவவதாரஞ் செய்ததும், அவர் மூன்ரும் வயதிலே ஞானப்பால் அளிக்கப்பெற்றதும் ஆகிய பெருமை வாய்ந்தது, திருவாதிரைத் திருநாளாகும். அச்சிறப் புடைமை கருதித் திருத்தொண்டர் புராண விரிவுரையைத் திருவாதிரைத் திருநாளில் தொடங்குதல் வேண்டுமெனக் கருதினர். சேக்கிழார் பெருமானுல் சித்திரைத் திருவாதிரை நாளில் தொடங்கப்பெற்ற திருத்தொண்டர் புராண விரிவுரை, அடுத்த ஆண்டு சித்திரைத் திருவாதிரை நாளில் இனிது நிறைவெய்தியது. அதனைக்கேட்ட சோழ மன்னரும் மற்றவர்களும் இன்பக்கடலில்