பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 59 உள்ளங்கால் தெரிய இருப்பது போன்ற இரு கால் விரிப்புக்குள் அமர்ந்து கொள்ளவும். பிறகு, முதுகினை வளைக்காமல், நேரே நிமிர்து உட்காரவும். கைகள் இரண்டையும் முழங்கால்களின் மீது வைத்திருக்கவும். பயன்கள்: இந்த வஜ்ராசனத்தின் நோக்கமானது முழங்கால்களின் அவலட் & 6&RTLD IT 6UT அசைவினைப் போக்கவும் முழங்கால்களின் கடினத் தன்மையை மாற்றி, அந்தத் தசைகளையும், மூட்டுக்களையும் நெகிழ்வு நிறைந்தனவாக ஆக்கி, இனிய முறையில் செயல்பட வைப்பதுதான். முதலில் முழங்கால்களை மடித்து அமர்வது துன்பமாக இருந்தாலும், முயன்றுகொண்டேயிருந்தால் இயல்பாக வந்துவிடும். வேண்டுமென்றே உடலை வருத்தி எந்த ஆசனத்தையும் செய்யக்கூடாது. எண்ணிக்கை 1. உட்கார்ந்த நிலையில், கால்களை மடக்கி முன்னர் விளக்கியதுபோல ஆசனத்தில் இருத்தல். 2. ஆசனத்திலிருந்து எழுந்து முழங்கால்களில் இருத்தல்.