பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 95 அழ்ந்து மூச்சை வெளியேற்றி, வயிற்றை உள்ளே இழுத்து, மார்பு உதரவிதானத்தை நிமிர்த்தி நிற்பது. 3. வயிற்றுத் தசைகளை உள்ளே இழுத்திருந்ததை இப்பொழுது மெதுவாக வெளியே வரவிடுதல். குறிப்பு: வெறும் வயிற்றில்தான் இந்த ஆசனம் செய்யப்படவேண்டும். பலஹlன இதயமுள்ளவர்கள், இந்தப் பயிற்சியை செய்யக் கூடாது. தொந்தி உள்ளவர்கள், இந்தப் பயிற்சியை செய்யவும் முடியாது. 5 லிருந்து 10 வினாடி வரை இந்த ஆசனம் செய்யலாம். பயன்கள்: வயிற்றுத் தசைகளை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைத் தீர்க்கிறது. பசி மந்தத்தைப் போக்குகிறது, ஈரல் நோய்களைக் குணப்படுத்துகிறது. 27. ஹஸ்தபா.த குஸ்தாசனம் பெயர் விளக்கம்: ஹஸ்தம் என்றால் கை, பாதம் என்றால் கால், ஆக, காலையும் கையையும் இணைத்துச் செய்கின்ற ஒரு ஆசனம் என்று குறிப்புக் காட்டியிருக் கின்றனர். செயல் முறை: நிமிர்ந்து விறைப்பான நிலையில் முதலில், நிற்க வேண்டும். பிறகு, வலது காலை முன்புறமாக நேர்க்கோண அளவில் (Right angle) விறைப்பாக நீட்ட வேண்டும். முழங்கால்களை மடக்காமல், நேராக நீட்டியிருக்க வேண்டும். பின்னர், நேராக நிமிர்ந்து நின்றபடிே லது கையை நீட்டி, நீட்டியிருக்கும் வலது காலின் கட்டை விரலைத் தொடவேண்டும். எக்காரணம் கொண்டும், குனியவோ, கால்களை வளைக்கவோ கூடாது. நிற்கின்ற இடது காலும் வளையாமல்