பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 06 பயப்படாதீர்கள்

என்பது ஒரு குத்திரம். முகத்தல் அளவைப் பெயர் களுக்கும் நிறுத்தல் அளவைப் பெயர்களுக்கும் உரிய முதல் எழுத்துக்களாகி, வழங்கும் வழக்கில் உள்ளன என்று எடுத்துச் சொல்லப்படுவன ஒன்பது எழுத் துக்கள்; அவை க-ச.த.ப என்பனவும் ந-ம-வ என்பன வும் அ-உ என்பனவும் ஆம் என்று புலவர்கள் சொல் வார்கள் என்பது இதன் பொருள்.

இந்த - ஒன்பது எழுத்துக்களேயும் முதலாகக் கொண்டு வரும் அளவைப் பெயர்களை உரையாசிரியர் கள் காட்டியிருக்கிருர்கள். . - - -

க-காலம்: இது இப்போதும் வழங்கி வருகிறது. . ச-சாடி: இப்போது வழக்கில் இல்லை. த-துாதை, தூணி: வழக்கில் இல்லே. ப-பனே, பானே, பதக்கு; பதக்கு என்பது மாத்தி' ரம் சில இடங்களில் வழங்கி வருகிறது.

க-நாழி: நாம் உபயோகிக்கும் படி. ம-மண்டை: வழக்கில் இல்லை. வ-வட்டி: வழக்கில் இல்லை. அ-அகல்; வழக்கில் இல்லே. உ-உழக்கு, உரி; உழக்கு என்பது மாத்திரம் வழங்கிவருகிறது. - -

இவற்றையன்றி, ஆழாக்கு, குறுணி, செவிடு, மரக் கால், மிடா, முதலிய அளவைப் பெயர்கள் பிற்காலத் தில் வழங்கலாயின. போனே, தூதை, அகல், மண்டை” முதலியன பானேயின் பல வகைகள். இப்பெயர்களைக் கொண்டு, பழங்காலத்தில் மண்ணுல் ஆகிய அளவு கருவிகளே பெரும்பாலும் வழங்கிவந்தன என்று தெரிந்துகொள்ளலாம். இப்பெயர்கள் யாவும் தமிழ்ப் பெயர்களாகவே இருத்தலின் தமிழர் வாழ்க்கையில்