பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பயப்படாதீர்கள்

மட்டுமல்லாமல் பிற அதிகாரங்களுக்கும் பயன்படும். எனவே நூல் முழுவதற்கும் பயன்படும் இலக்கணத்தைச் சொல்வதல்ை, நூல் மரபு என்ற பெயர் வைத்திருக் கிருர். 'நூல் என்பது இலக்கணநூல். மரபு என்பது இலக்கண விதிகள், இேத்தொல்காப்பிய மென்னும் நூற்கு மரபாந்தகணக்கு வேண்டுவனவற்றைத் தொகுத்து உணர்த்தினமையின் நூன்மரபென்னும் பெயர்த்தாயிற்றும் என்று நச்சினர்க்கினியர் எழுதுகிருர், இதில் உள்ள சூத்திரங்கள் 33,

இப்பகுதியில் எழுத்துக்களின் பெயர், வரிசை வகை மாத்திரை, குறுகிய எழுத்துக்கள், புள்ளி பெறும் எழுத்துக்கள், இன்ன எழுத்துக்குப் பின் இன்ன எழுத்து வரும் என்பது, சுட்டு வி ைஎழுத்துக்கள், சங்கீதத்தில் எழுத்தின் ஒசை அதிகமாக ஒலித்தில் என்ற செய்திகள் வருகின்றன. -

இரண்டாவது பிரிவு, "மொழி மரபு என்பது, வார்த்தைகளிலே வரும்போது எழுத்தின் அமைப்பு ஆப்படி இருக்கும் என்பதைச் சொல்லும் பகுதி இது. "மேல் எழுத்து உணர்த்திப் பின் அவை தம்மின் தொடருமாறும் உணர்த்தி அவ்வெழுத்தான் ஆம் மொழி யது மரபு உணர்த்துகின்றமையின் இவ்வோத்து மொழி மரபெனக் காரணப் பெயர்த்தாயிற்று என்பது நச்ச் குர்க்கினியர் கூறும் விளக்கம். இதில் உள்ள சூத்தி ரங்கள் 49, .

இதில் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம்,

உயிரளபெடை, ஒரெழுத் தொருமொழி, ஈரெழுத் தொருமொழி, தொடர்மொழி, மகரக் குறுக்கம், எழுத்துப்போலி, மொழிக்கு முதலாகும் எழுத்துக்கள்,