பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருத்தலப்பயணம் 69

சேர்ந்தே உள்ளன. ஆழ்வாரின் ஒவ்வொரு பாசுரத்திலும் இம்மூன்று தத்துவங்களும் நன்கு பொருந்தி அமைந்திருப் பதைக் காணலாம்.

அங்கண் ஞாலம் அஞ்ச அங்கு

ஓர்ஆள் அரியாய் அவுணன் பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த

புனிதன இடம்; பைங்கண் ஆனைக் கொம்பு கொண்டு

பத்திமை யால் அடிக்கீழ் செங்கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிங்கவே.ழ் குன்றமே (1):

(ஞாலம்-பூமி, அரி-சிங்கம்; அவுணன்- அரக்கன்;

உகிர்-நகம்; ஆளி-சிங்கம்)

என்ற பாசுரம். ஆழ்வார் பாசுரங்கள் தோறும் முன்னடி களில் நரசிம்மாவதார வரலாறும், பின்னடிகளில் சிங்க வேழ் குன்றத்தின் நிலைமையையும் வருணிக்கப்பெற்று வைணவ தத்துவங்கள் குழைந்து பெய்யப்பெற்றிருப் பதைக் கண்டு மகிழலாம்.

26. சிங்கவே.ழ் குன்றம்-இது சிங்கவேள் குன்றம்" என்றும் வழங்கப் படுவதுண்டு, சிங்கம்-நரசிம்ம சொரூபியர்ய், வேள்-யாவராலும் விரும்பப் படு கின்ற கட்டழகு உடையவர்ான பெருமான் எழுந்தருளிய, குன்றம்-திருமலை எனப் ப்ொருள் படும். சிங்கவே.ழ் குன்றம்’ என்பது நரசிம்ம மூர்த்தி எழுந்தருளியிருக்கின்ற ஏழு குன்றங் களையுடைய தலம் என்பது பொருள்.