பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 பரகாலன் பைந்தமிழ்

உய்வீர்களாக; அப்படித் தொழுதால் தும் பாவங்கள் யாவும் தொலைந்துபோம்' என்று ஆற்றுப் படுத்துகின் நார் ஆழ்வார். இங்குப் பொருந்தி வாழ்கின்ற பெரு மானுடைய இணையடிகளன்றி வேறொன்றையும் அறி யேன்” என்று தனது பற்றுறுதியையும் வெளியிடுகின்றார். மேலும் 'சலசயனத்து ஆன் ஆயன் அடியல்லது ஒன்றும் அறியேன் அடியேனே' (4) என்று கூறுவர். கிருஷ்ணா வதாரத்து எம்பெருமானே இங்கும் எழுந்தருளியுள்ளான் என்பது ஆழ்வாரின் நம்பிக்கை. 'கிருஷ்ணாவதாரம் தீர்த்தம் ப்ரஸாதித்ததென்று வெறுக்க வேண்டாதபடி பிற்பாடர்க்கும் அநுபவிக்கலாம்படி அவ்வதாரத்தின் படியே வந்து சாய்ந்தவன்” என்பது பெரிய வாச்சான் பிள்ளையின் வியாக்கியானம்.

'சிறுபுலியூர் என்ற திருத்தலமும் வேண்டா; அங் குள்ள சலசயனத் திருக்கோயிலும் வேண்டா, அங்குக் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமானும் வேண்டா; அத்திருக்கோயிலைத் தொழுவதையே இயல்பாகவுடைய பாகவதோத்தமர்களின் திருவடிகளே சரணம் என்று இருப்பார்க்குத் துயரெல்லாம் தொலைந்திடும்' என்கின் நார் ஆழ்வார். சலசயனம் தொழும் நீர்மையுடையார் அடிதொழுவார் துயர் இலரே” (6) என்பது திருமங்கை யாழ்வாரின் திருவாக்கு. 'தொண்டர் தொண்டர் தொண் டர் தொண்டன் சடகோபன்' (திருவாய். 7.1:11) என்ற நம்மாழ்வாரின் திருவாக்கும் ஈண்டு ஒருங்கு வைத்து எண் னிப் போற்றத் தக்கது. பாகவதர் வழிபாடு பகவான் வழிபாட்டை விடச் சிறந்தது என்பது வைணவ சமயத் தின் தலையாய கோட்பாடு.

சிறுபுலியூர் எம்பெருமான் இருக்கும் இடம் தனக்குத் தெரியவில்லையே என்கின்றார் ஆழ்வார்.