பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#68 பரகாலன் பைந்தமிழ்

களில் பாக்குக்குலைகள் குவிந்து காணப் பெறுகின்றன (6,6:8).

தலத்தின் சிறப்பு: நறையூரின் சிறப்பைப்பற்றியும் பாசுரங்களில் குறிப்புகள் கிடைக்கின்றன. இவ்வூரில் வாய்மையுள்ள அந்தணர்கள் அதிகமாக வாழ்கின்றனர். (6.5:); நான்மறைகளை முறையே ஒதி சோம வேள்வி களை நடத்துவதையே கடமைகளாகக் கொண்ட அந் தணர்களும் அங்கு நிரம்பியுள்ளனர் (6: 7:5); நான்கு மறை கள், ஐந்து வேள்விகள், ஆறு வேதாங்கங்கள், ஏழு இசை இவற்றைப் பொழுது போக்காகக் கொண்ட மறை யோரும் அங்கு வாழ்கின்றனர் (6.7:7); வள்ளண்மை வாய்ந்த பார்ப்பர்ைகளும் அங்கு மிகுதியாக வாழ், கின்றனர்.

தறையூர் நம்பியின் பெருமை: நறையூர் நம்பியின் பெருமைகளைப் பேசும்போது ஆழ்வாரின் பக்திவெள்ளம் கரை புரண்டோடுகின்றது. முதலில் எம்பெருமானின் திருமேனியைச் சிந்திக்கின்றார் ஆழ்வார்.

பல்வநீர் உடைஆடை ஆகச் சுற்றி

பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா,

செல்விமா திரம் எட்டும் தோளா, அண்டம்

திருமுடியா நின்றான் (6.6:3)

iபவ்வம்-கடல்; பார்-பூமி, பவனம்-காற்று: செவ்வி-அழகிய, மாதிரம்-திசைகள்; அண்டம்அண்டபித்தி1

விபுவான எம்பெருமானுக்குக் கடல் திருவரையில் உடுக்கும் ஆடையாகின்றது; நிலப்பரப்பெல்லாம் திருவடி யாகின்றது; வாயு மண்டலம் முழுவதும் (ஏன்? விண்வெளி முழுவதும்) திருமேனியாகின்றது. திசைகளெட்டும் திருந் தோள்களாகின்றன; அண்டகடாகம் திருவபிடேகமாகின்