பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爱

2.

பரகாலன் பைந்தமிழ்

னையை அமுது செய்த கள்வன்; பிரளய காலத்தில் ஆலத் தளிரில் கண்வளர்ந்தவன்; யூதனையின் முலைப்பாலை அமுது செய்யும் பாவனையில் அவளது உயிரைக் குடித் தவன்; இரட்டை மருத மரங்களை முறித்து ஒழித்து நள கூபர மணிக்கிரீவர்களின் ச்ாபம் போக்கியவன்; மாவலி யிடம் மூலடி மண் பெற்று பெருநிலம் அளந்து கவர்ந்து கொண்டவன்(i), கண்னனாக வந்து ஆநிரைகளை மேய்த்தவன்; கடலில் சேது.கட்டி அரக்கர்களின் தலை கனை அறுத்துத் தள்ளினவன்; கார்கால மேகம் போன்ற வடிவுடையவன் (2). கருவிடமுள்ள காளியன் தடத் தைக் கலக்கி, முன்னழகழித்து, அவன்றன் படம் இறப் பாய்ந்து பன்மணிசிந்தப் பல்நடம் பயின்றவன் (3), 'கறவை முன்காத்துக் கஞ்சனைக் காய்ந்த காளமேகத் திருவுருவன், பறவை முன் உயர்த்துப் பாற்கடல் துயின்ற பரமன் (4), பாரினை உண்டு பாரினை உமிழ்ந்தவன்; பார்த்தனுக்குத் தேர் ஊர்ந்து பகைவர்களின் தேர்களைப் பங்கப்படுத்திய பெருமான் (5). பூவைப்பூப்போல உரு மாய்ந்து போம்படியாக இலங்கையின் அரக்கர் சேனை கன் ஒழியும் படியாகக் கொடிய கணைகளைச் செலுத்திய கோல வில்லி இராமன் (6). வாமன மாணியாய் மாவலி யிடம் மூவடி மண் இறந்து பெற்றுத் திசைகளெல்லாம் விம்முற வளர்ந்த பெருமான் (7). நான்முகன் முதலிய தேவர்கள் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து எம்பெருமானு டைய பரத்துவ குணங்களையும் சொல்லித் தொழுதேத்த அவர்கட்குத் திருவருள் சுரந்து கொண்டு திருப்பாற் கடலில் அரவணைப்பள்ளியின் கண்துயில் கொண்டிருக் கும் எம்பெரும்ான் (9). மேலும்,

மூடிஷ்டை அர்ர்க் கிடச்செய்யும் அசுரர் தம்விெரு கான்அன்று அரியாங்

மடியிடை வைத்து மார்வம்முன் கீண்ட

மாயனார் மன்னிய கோயில் (8)