பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 3 #5

மூடப்பெற்றனவாய், விளங்கும் பிரகாசம் மழுங்கி பழைய நான் மறைகளும் மறைந்து போக, மீண்டும் தேவர்கட்கும் முனிவர்கட்கும் அருள் கூர்ந்து இருள் நீங்கும்படியாக வேதங்களை ஈந்த எம்பெருமான்(3). திரு பாற்கடலை மந்தர மலையைக் கொண்டு ஆயிரத் தோன் களால் கடைந்தருளினவன் (கி). துனில் நரசிங்கனாகத் தோன்றி இரணியனின் மார்பைக் கீண்டவன்(5) : பரசுராமனாக அவதரித்துக் கார்த்த வீசியனின் ஆயிரம் தோள்களையும் மழுப்படையால் கொய் தொழித்தவனும், அதன் பிறகு தேவர்கள் ஆயிரம் திருநாமங்களையும் சொல்லித் துதிக்க அலைகடலில் ஆயிரம் முகங்களை யுடைய ஆதிசேடனாகிய திருப்பள்ளியில் அறிதுயில் கொள்ளுபவனுமான எம்பெருமான் (6). இராவணனைக் கொன்றொழித்து இலங்கோபுரியைப் பாழ்படுத்தியவனும் சமுத்திரராசன் வழிபடவும், வாணர முதலிகள் கைங் காரியம் புரியவும் பெருமையுடையவனும், அலை கடலை மலைகளினால் அணைகட்டச் செய்தவனுமான எம்பெரு மான் (7). காலம் முதலிய எல்லாப் பொருள்கட்கும் நிர்வாககனாய், வேள்விகட்குத் தலைவனாய், கசேந்திர னுடைய துன்பத்தைப் போக்கியவனாய், இலங்காபுரியை அழித்தவனாய், அர்ச்சுனன்பொருட்டு திருவாழியைக் கொண்டு பகலவனை மறைத்தவனாய்த் திகழ்த்த எம்பெருமான்(8). பூதனையின் முலையுண்ட பிள்ளையாய், பிரளயம் கொண்ட பூமியை வெளிப்படச் செய்தவனாய் ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளினவனாய், சர்வேசு வரனாய் மணிமுடியணிந்த தேவர்கட்கு எட்டாதவனாய், தன் நெஞ்சில் நின்று வெவ்விய துக்கங்களையும் போக்கின வனாய், கண்ணனாய் கோவர்த்தனமலையைக் குடை யாய்க் அவித்தவனாய்த் திகழும் எம்பெருமான்(9). அரங்க மாநகரில் அறிதுயில் கொண்டு எழுந்தருளியிருப்பவன்.

இன்னுமொரு பதிகத்தில் (5.8) பல அன்பர்களை ஆதரித்த வரலாறுகளைக் கூறித் திருவரங்க நாதனின் திரு