பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47& பரகாலன் பைந்தமிழ்

جيجيجessصبعدمصهجم=

திருநறையூர் மணிமாடத்தில் எழுந்தருளியுள்ளான் என்கின்றார்.

பாலனாய் ஏழுலகுண்ட வரலாறு : பாலனாய் ஏழுல குண்டு ஆலிலையில் என்னவசஞ்செய்த வரலாறு பல பாசுரங்களில் அதுசந்திக்கப்பெறுகின்றன. திருவிண்ண கர் எம்பெருமானை மங்களாசாசனம் செய்யும் பாசுரம் ஒன்றில்,

பார் எழு கடல்எழு மலைஎழுமாய்ச் சீர்கெழும் இவ்வுலகு ஏழுமெல்லாம் ஆர்கெழு வயிற்றினில் அடக்கிநின்று அங்கு ஓர்எழுந்து ஒர் உரு ஆனவனே' (6. 1: 5) (பார்னழு - ஏழுத்தீவுகள் அடங்கிய பூமி, கடல் எழு-ஏழு கடல்கள்; மலை எழு-ஏழு மலைகள்; உலகேழு-ஏழு உலகங்கள்; ஒர் எழுத்து-அகாம்; 'ஏழு தீவுகள், ஏழு கடல்கள், ஏழு மலைகள் முதலிய வற்றை எல்லாம் பிரளய காலத்தில் நின் திருவயிற்றில் அடக்கிக்காத்தவன்; எழுத்துக்கெல்லாம் அகரமாக இருப்பவன்' என்கின்றார்.

திருநறையூர் எம்பெருமானை மங்களாசாசனம் செய்யும்பாசுரம் ஒன்றிலும் இவ்வரலாற்றை அநுசந்தித்து மகிழ்கின்றார் ஆழ்வார்.

10. ஏழுதீவுகள் நாவலந்தீவு, (சம்பு), இறலித் தீவு, குதத்தீவு, கிரவுஞ்சத் தீவு, சால்மலித்தீவு, பாகத் தீவு புட்கரத் தீவு, ஏழு கடல்கள் : உப்பு, பால், தேன், நெய், கருப்பஞ்சாறு, தயிர், தூய நீர்; ஏழுமலைகள்: இமயம், மந்தரம், கயிலை, வடவிந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரி; ஏழுகீழ் உலகம் : அதல, விதல, சுதல, தராதல, மகாதல, ரசாதல பாதாலம்; ஏழுமேலுலகங்கள் : பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர்

லோகம், ஜனலோகம், தபர்லோகம், சத்திய லோகம்,