பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

姬&每 பரகாலன் பைந்தமிழ்

(கொழுந்து, தளிர் குழாம்-கூட்டம், பொய்கைதடாகம்; கோள் முதலை-வலிவுள்ள முதலை; கொண்டற்கு-காலைக் கவ்விதற்கு எள் கி. மெலிந்து; அழுந்திய-வருந்தினர்

என்ற பாசுரத்தில் இந்த வரலாற்றை அநுபவித்து மகிழ் கின்றார். இதே வரலாறு திருவல்லிக்கேணி பார்த்த சாரதியை மங்களாசனம் செய்த பாசுரம் ஒன்றிலும் அநுசந்திக்கப் பெறுகின்றது.

மீன் அமர் பொய்கை நாள் மலர் கொய்வான்.

வேட்கையி னோடுசென்று இழிந்த கான்அமர் வேதம் கையெடுத்து அலற

கராஅதன் காலினைக் கதுவ ஆனையின் துயரம் தீரப்புள் ஊர்ந்து

சென்று நின்று ஆழிதொட் டானை (2.1:7)

(மீன் அமர்-மீன்கள் உள்ள; பொய்கை-தடாகம்; நாள் மலர்-அன்றலர்ந்தபூ வேட்கை-விருப்பம்; கான்அமர்-காட்டில் திரியும்; வேழம்-யானை; கை-துதிக்கை; எடுத்து-உயரத் துரக்கி: அலறகூச்சலிட: கரா-முதலை; கதுவ-கவ்விக் கொள்ள, புள்-கருடன், ஆழி-சக்கரப்படை)

இந்தப் பாசுரத்தில் அந்த வரலாறு ஆழ்வார் அநுபவமா கின்றது.

இராமாவதார அநுபவம்: ஆழ்வார் இந்த அவதாரத்தை அநுபவிப்பது சற்று விநோதமாக அமைந்துள்ளது. இலங்கைப் போர்க்களத்தில் இராவணனுடன் மாண்டு போன அரக்கர்கள் போக, மிகுந்திருந்த அரக்கர்கள் தங்கள் உயிருக்கு மன்றாடும் நிலையில் பெருமாளுடைய வெற்றிச்செல்வத்தை எடுத்துரைத்துப் பாசுரமிட்டுப் பேசி மகிழ வேண்டும் என்ற ஆசை ஆழ்வாரிடம் எழுந்தது.