பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கருத்துகள் 50.3

தானோர் உருவே தனிவித்தாய்த்

தன்னின் மூவர் முதலாய

வானோர் பலரும் முனிவரும்

மற்றும் மற்றும் முற்றுமாய் (டிெ 1.5:4)

எப்பொருட்கும் வேர் முதலாய் வித்துமாய்ப்

பரந்து தனிநின்ற கார்முகில் வண்ணன்

எம்கண்ணன் (டிெ 2.8:10) என்ற பாசுரப் பகுதிகளில் இதனைக் கண்டு தெளியலாம்.

மேற்கூறிய மூன்று காரணங்களுள் இறைவன் உல கிற்கு முதற்காரணம் என்பது மிகவும் முக்கியமானது. இதனைத் தெளிவாக்க வேண்டும். காரணப் பொருள் பின் காரியப் பொருளாக மாறுவது முதற்காரணம் என் பது பொதுவிதியாகும். இங்கு இறைலுனே இவ்வுலகப் பொருளாக மாறினான் என்றால் அங்ங்ணமன்று. இவ்வு கப் பொருள்கட்கு அவற்றின் நுண்ணிய நிலை முதற் காரணம். பருப்பொருளாக மாறிய நிலைமை காரியம். இறைவன் துண்ணிய நிலையிலுள்ள சித்து அசித்துகளில் உள்ளேயும் அந்தர்யாமியாக உள்ளான். நுண்மையான சித்து அசித்துகளில் இறைவன் அந்தர்யாமியாக இருக்கும் நிலை முதற்காரண நிலையாகும். பருப்பொருளாக உள்ள சித்து அசித்துகளில் இறைவன் அந்தர்யாமியாக உள்ள நிலையே காரிய நிலையாகும். முதற்காரமாக வுள்ள நிலையிலும், காரியமாகவுள்ள நிலையிலும் சிறிதும் வேறுபடுவதில்லை. இதனால் ஈசுவரன் விகாரமற்றவன் - நிர்விகாரகன்- என்று சொல்லுவதில் தவறில்லை." இக் கருத்தை ஆழ்வார் பாசுரத்தில் வித்தாய் முதலில் சிதை யாமே (திருவாய் 1.5:2) என்று தொடர் அழகுடன் விளக்

11. தத்துவத்திரயம்-ஈசுவரப் பிரக ரணம் 26.