பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கருத்துகள் 519

வத் பாகவத கைங்கரியங்கள் பண்ணுகின்றவராகையாலே கீழான (ஹேயமான) ஐசுவரியமும் இவ்வாழ்வார் திருவுள் ளத்தால் உத்தேச்யமாய் விட்டதிறே' என்றாராம். யார் யார் எந்தெந்தப் பலனை விரும்பினாலும் அந்தந்தப் பலன் இவ்வருளிச் செயல் மூலமாகக் கிடைக்கும் என்பது உண்மைப் பொருளாகும்.

இங்ங்னமே திருச்சேறை எம்பெருமான் மீதுள்ள பாசுரங்களிலும் அப்பெருமானைப் பணிகின்றவர்கள் பாகவதோத்தமர்களே என்று தமது பாகவத பக்தியை வெளியிடுகின்றார் ஆழ்வார்.

தண்சேறை எம்பெருமான் தாள்தொழுவார்

காண்மின்என் தலைமே லாரே (7.4:1)

தாதோடு வண்டலம்தம் தண்சேறை

எம்பெருமான் தாளை ஏத்தி

போதோடு புனல் துரவும் புண்ணியரே

விண்ணவரின் பொலிகின் றாரே (7. 4. 3)

சந்தப்பூ மலர்ச்சோலைத் தண்சேறை

எம்பெருமான் தாளை நாளும்

சிந்திப்பார்க் கென்னுள்ளம் தேனுாறி

எப்பொழுதும் சிந்திக்குமே (7, 4: 5)

என்ற பாசுரப் பகுதிகளில் ஆழ்வாரின் பாகவத பக்தியைக் கண்டு தெளியலாம்.

இத் திருமொழியின் வியாக்கியானத் தொடக்க உரை யில் பிள்ளையழகிய மணவாளரையர் கரையோரமே போகா நிற்க, உள்ளே மாமதலைப் பிரானைத் திருவடி தொழுது போனாலோ?’ என்று ஒருவர் சொல்ல, அதற்கு அவர் ஆர்தான் திருமங்கையாழ்வாருடைய பசைந்தவனை யத்திலே(வளையம் - திருமுடியில் அணியும் மாலை) கால் வைக்கவல்லார் என்றருளிச் செய்தார்' என்று உள்ளது.