பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/575

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கருத்துகள் 525

ஆழி வண்ண நின்

அடி இணை அடைந்தேன். (1)

என்றவாறு ஒருமுறைக்கு ஒன்பது முறை பன்னி உரைத்து அரங்க நகர் அப்பனைச் சரணம் அடைகின்றார்.

திருவிண்ணகர் எம்பெருமானை மங்களாசாசனம் செயயும் மூன்று திருமொழிகளும் (6.1;6.2:6.3) சரணா கதி தத்துவத்தை விளக்குவனவாகும்.

துறந்தேன் ஆர்வச்செற்றச்

சுற்றம்; துறந்தமையால்

சிறந்தேன் நின்னடிக்கே

அடிமை; திருமாலே! (6.3:2)

என்ற திருப்பாசுரத்தில் இந்நெறி சுட்டப்பெறுவதைக் காணலாம். திருநறையூர் திருப்பதிகம் ஒன்றில் நெஞ்சை ஆற்றுப் படுத்தும் போக்கில்,

மூவுலகும் பலிதிரிவோன் இடர்கெடுத்த திருவாளன்

இணை அடியே அடைநெஞ்சே (6.9:1)

என்று ஒருமுறைக்கு ஒன்பது முறை இந்த நெறியை வடி புறுத்துகின்றார்.

உள்ளத்தை உருக்கும் பாசுரங்கள் நைமிசாரணியத்து எம்பெருமான்மீதுள்ளவை. பாசுரங்கள் தோறும் ஒரு முறைக்கு ஒன்பது முறையாக 'உன் திருவடி அடைந் தேன்” என்று சொல்லிச் சரண் அடைந்ததைக் காண்கின் றோம். பிராட்டியை முன்னிட்டுச் சரணம் அடைவது ஆன்மாவின் சொரூபமாகையால்,