பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கருத்துகள் 527

புகல் ஒன்று இல்லா அடியேன் உன்

அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

(திருவாய் 6.10:10).

என்பதில் தனக்கு எம்பெருமானைத் தவிர வேறு உபாய மில்லை என்று கூறிக்கொண்டு நம்மாழ்வார் சரண் புகுவது அதன்னிய கதித்துவம்.

புருஷகாரம்: தகவுரை கூறுதல். இது பிராட்டிக் குரியது. வைணவ தத்துவத்தில் இவன் புருஷகார பூதை யாகச் செயற்படுகின்றாள். பிரபத்தி நெறியில் பெரிய பிராட்டியாரோடு கூடிய எம்பெருமான் திருவடிகளை உபாயமாகப் பற்ற வேண்டும் என்பது விதி.

வைணவமந்திரமாகிய துவயம் இதனைச் செப்பு கின்றது (சீமந் நாராயண சரணன சரணம் பிரபத்தியே - என்ற முதல் வாக்கியம்). மக்களுக்கு இறைவனும் இறைவையுமான இருவரோடு சம்பந்தம் இருக்கவும், இறைவனை அடையும் யோது பிராட்டி புருஷகாரமாக அமைவது ஏன்? இதற்கு விடை: சேதநன் தான் எம்பெரு மானுக்குச் சேஷபூதன் (அடிமை) ஆகவும், எம்பெருமான் தனக்குச் சேவி (தலைவன்) ஆகவும் இருக்கும் தொடர்பை நன்கு அறிந்தவன் என்பது உண்மையே. ஆயினும், 'இவள் தாயாம் தன்மையால் வந்த வாத்சல்யத்தை மிகுதியாக உடையவள். தந்தையாகிய எம்பெருமானைப்போல் வன்மையும் மென்மையும் கலந்திராமல் மென்மையே வடிவு கொண்டவள். பிறர் கண் குழிவு காட்டாத தன் மையாள்; தீய மனமுடையவர்களையும் மருவித் தொழும் மனமுடையவர்களாகுகைக்குத் தக்க செயல் புரிபவள். குற்றமுடையவர்கட்குக் கூசாமல் வந்து காலிலே விழலாம்படி இருப்பவள். ஆனமையால் வந்த வன்மை யோடே தந்தையாம் தன்மையால் வந்த நகலம் செய்யும் தன்மையுடையவரையும், கு ற் ற ங் க ைள ப் பத்துப் பத்தாகக் கணக்கிட்டுக் கொடிய தண்டனை