உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரதாயணம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிஷ்: ஆமாம்! பாக: அப்படி ஒருவரையொருவர் தழுவிக் கொள்ளும்போது என்ன நடந்தது தெரியுமோ? சிஷ்: மறைத்திருந்த புலி நகத்தால் குத்திக் கொன்றுவிட்டான்! பாக: அடே முட்டாள்! அது சிவாஜி கதையடா! சிஷ்: ஆமாம்! பாக: இருவரும் தழுவிக்கொண்டதைக் கண்ட அரண்மனை வாசிகள் ஆனந்த பாஷ்பம் பொழிந்தனர்! சிஷ்: ஆமாம்! பாக: உடனே பரதன், ராமனைப் பார்த்து, “அண்ணா! நீதான் தந்தை சொல் தட்டக்கூடாதென்று ஆரண்யம் வந்து விட்டாய்!.... உனக்குப் பதிலாக உன் பாதுகைகளைக் கொடு! அவைகளுக்குப் பட்டங் கட்டி, அவற்றின் பிரதி நிதியாக நான் ஆளுகிறேன் என்று, ராமனுடைய காலிலே யிருந்த பாதுகைகளைக் கழற்றிக்கொண்டான். சிஷ்: ஆமாம்! பாக: ராமனும் வேறு வழியின்றி, மாணிக்கக்கல் மறைத் திருந்த பாதுகைகளைக் கொடுக்க வேண்டியதாயிற்று. சிஷ்: ஆமாம்! பாக: அப்படி ராமன் பாதுகைகளைக் கொடுத்ததிலும் சூழ்ச்சியிருந்ததை பரதன், உணர முடியவில்லை. யும் உணர முடியவில்லை! சிஷ்: ஆமாம்! உணரமுடியவில்லை! ஒரு கைகேயி பாக: பாதுகையிலே மாணிக்கக்கல்! மண்டலங்களை விலை கேட்கக் கூடிய மதிப்பு வாய்ந்த மாணிக்கக்கல்! அதனால் அவை களைத் தலையிலே வைத்துத் தூக்கிக்கொண்டு போனான் பரதன்! சிஷ்: ஆமாம்! பாக: பிறகு, பிறகு, தனக்குரிய நாட்டில் ராமன் படை எடுப்பது அநியாயம் என்று பரதன் வாதிட்டான். சிஷ்: ஆமாம்! பாக: பதினாலு ஆண்டு தன் பாதுகை ஆண்டிருப்பதால் ஆளும் அனுபவ பாத்தியதை தனக்கே உரியது என்று பதில் கொடுத்தான்... 15 ராமன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரதாயணம்.pdf/15&oldid=1696295" இலிருந்து மீள்விக்கப்பட்டது