உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரதாயணம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிஷ்: ஆமாம்! பாக: இந்த விஷயம் அரண்மனையிலேயுள்ள எல்லோருக்கும் தெரிந்துவிட்டது! ....ஆனால் கைகேயிக்கு மாத்திரம் தெரிவிக்கப்படவில்லை. சிஷ்: ஆமாம்!... பாக: காரணம் என்னவென்றால்... சிஷ்: ஆமாம்! பாக: என்னடா ஆமாம்....? ? சிஷ்: காரணம் என்னவென்றால்... (கோபமாக) என்னா சொல்லு! சிஷ்: கைகேயிக்குத் தெரிந்தால், தசரதன் மீது கோர்ட்டிலே கேஸ் போட்டுவிட்டு, பட்டாபிஷேகத்தை நிறுத்த 'ஸ்டே ஆர்டர்' வாங்கிவிடுவாள்! பாக: அடே அதெல்லாம் இந்தக் காலம்!. . அந்தக் காலத்திலே கோர்ட் ஏது?. . சிஷ்: அப்படியானால் இராவணனுக்கு "ஏரோப்ளேன்” ஏது சாமி? பாக: ஏய்'. . அவசரக்காரா! அதற்குள் ஆரண்ய காண்டத்துக்கு வராதே! சிஷ்: செத்தாலும் ஆரண்யத்துக்குப் போக மாட்டேன் சாமி! பாக: அகோ வாரும் பிள்ளாய் சிஷ்யா! .. இப்படியாகத்தானே, பரதனுக்கும் கைகேயிக்கும் தெரியாமல் ராமனின் பட்டாபிஷேகத்திற்கான காரியங்களையெல்லாம் தசரதன் கவனித்துக்கொண்டிருந்தான் சிஷ்: ஆமாம்! • பாக: எப்படியோ கூனியென்னும் தோழிமூலமாகக் கைகேயிக்குச் சேதி எட்டிவிட்டது! சிஷ்: ஆமாம்! பாக: சேதி கேள்விப்பட்ட கைகேயி, சீறும் பாம்பானாள்! அடுக்குமா இந்த அக்கிரமம் என்று ஆத்திரப்பட்டாள்! இதை எப்படித் தடுப்பது என்று கூனியிடம் யோசனை கேட்டாள்! சிஷ்: ஆமாம்! 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரதாயணம்.pdf/9&oldid=1696289" இலிருந்து மீள்விக்கப்பட்டது