உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பராசக்தி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-12- நஞ்சைக் கொட்டி விட்டாள். கொஞ்சிக் குலாவி கொடுமை செய்துவிட்டாள் வஞ்சகி, இதைவிட என்னைக் கொன்றிருக்க லாமே அவள். பஞ்சையாய் பராரியாய்-என் தங்கைக்கு இப்படித் தரிசனம் தரவேண்டுமா நான்? வறுமை, திருட்டு, வஞ்சகம், விபச்சாரம்! எங்கே? வற்றாத ஜீவநதிகள் வளைந் தோடும் நாட்டிலே வளமான சோலைகள் பூத்துக் குலுங்கும் பூமியிலே! வாழ முடியாதவர்களை வாழவழி தெரியா தவர்களை வாழ்வதற்கே பிறந்தவர்களை! இந்த வங்கத்திலே என்னை வந்ததும் வராததுமாய் வாட்டி வதைக்கவா வேண்டும்? சிங்கத் திருநாடே! நீ சிலந்தி கூடாக மாறியது எப்போது? வந்தாரை வாழவைக்கும் வளமிகு தமிழகமே! நீ சொந்த நாட்டானையே சுரண்டுவது எத்தனை நாட்களாக? வீரப் பெண்களின் ஏடுகளை எழுதி எழுதி ஏற்றம் பெற்ற என் அருமை பொன்னாடே! நீ வீதிகளிலே விபச்சாரிகளைத் திரிய விட்டு உன் விழிகளை மூடிக் கொண்டது ஏன்? ஏன் வானத்தை முட்டும் மாளிகைகள் மானத்தை இழந்த மனிதர் கள்: உயர்ந்த கோபுரங்கள்.. தாழ்ந்த உள்ளங்கள்! ஏ, தமிழ் நாடே ! இதுதானா உன் பெருமை? தகுதி? யோக்கி யதை? கல்யாணி!... நீ மதுரையிலே.. நான் மதராஸ் தெரு விலே! மாறாத மனக் குழப்பத்துடன்...அநாதையாக ஆதர வற்றவனாக! யாரிடமும் எதுவும் பேசமுடியாத ஊமையாக!... ஐயோ... கல்யாணி...கல்யாணி. காட்சி - 10 (சந்திர சேகரனும், அவன் மனைவி சரஸ்வதியும், தம்பி ஞானசேகரனும் வரும் வழியில் ஜப்பான் விமானங்கள் போட்ட குண்டுகளால் பாதிக்கப் படுகிறார்கள்) (சந்திரசேகரனும் சரஸ்வதியும் ஆஸ்பத்திரியில்) சந் : டாக்டர் சார்... ஞானசேகரன் எந்த இருக்கான்? இலையே, டாக் : ஞானசேகரனா? பெட்லே அப்படி ஒருவர் இங்கே இல் சந்: ஆ? அப்படியானால் எங்கே இருப்பார்கள். டாக்: அந்தக் குண்டு வீச்சிலே மீதி யிருப்பவர்கள் இதைத்தவிர மற்றவர்களெல்லாம் இவ்வளவு பேர்தான். 1 செத்துப் போயிட்டாங்க. சந்:ஆ! ஞானசேகரா! நீ இறந்தா சரஸ்வதி ஊருக்குப் சொல்வேன். போனாய்? போனவுடன் ஞானசேகரனை எங் கேன்னு அப்பா கேட்பாரே-கல்யாணிக்கு என்ன பதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/13&oldid=1705876" இலிருந்து மீள்விக்கப்பட்டது