உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பராசக்தி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-16- றானே நாயைப்போல சுருண்டு நடைபாதையில் குடும்பத் துடன் வாழ்கிறானே அந்த நல்லவனை, நாதியற்றவனை நாலு காலு மிருகத்தைப் போல உழைக்கிறானே அவனை சொல்லு கிறேன். சென்னை புனிதமான நகரம்? அங்கே மனிதன் மிருகம். போலீஸ்: நீ மெட்ராசுக்கு மேயராக வர்ற காலத்திலே மிருகத்தையெல்லாம் மனுஷனுக்கு, குண : ஏன்... இப்பவே எத்தனையோ மிருகங்கள் மனித உருவத்தில்தானே இருக்கு. (அந்த இடத்தை விட்டு நகர்கிறான்) குண : (குழாயைப் பார்த்து)... ஆஹா.. கடவுள் தண் ணீரையாவது காட்டினாரே! (தண்ணீர் விழவில்லை)பாரசக்தி உன் மகனின் கதியைப் பார். அவனுக்கு உண்ண உணவு இல்லை. உடுத்த மாற்றுத் துணியில்லை! உறங்க ஒரு இடம் இல்லை? பராசக்தி- காட்சி - 14 (மதுரையில் இட்லி கடை வைத்துப் பிழைப்பு நடத்தும் கல்யாணி வீட்டில் ஓர் நாள்-) சாப்பிடுபவர் : இன்னியோட நாளைக்குத் தர்றேன், மூணு ரூபாய் ஆச்சி (இந்நேரம் கடன் கொடுத்த வியாபாரி வருகிறான்.) வியாபாரி : ஏ கல்யாணியம்மா! கல்யாணியம்மா கொடுக்க வழி இல்லேன்னா ஏம்மா கடன் வாங்குறே? கல் : இன்னும் ரெண்டுநாள் பொறுத்துக்குங்க; வாடிக் கைகாரங்க பணம் கொடுத்தவுடனே தர்றேன். வியா : அதெல்லாம் முடியாதம்மா; (இந்நேரம் வேணு வருதல்) வேணு: ஓய்! யாருங்காணும்? தனியாக இருக்கிற பொண்ணுகிட்டே வந்து தகராறு பண்ணுறது? பெரிய மனு ஷன் நிக்கறது கண்ணுக்குத் தெரியலே? வியா : மாப்கரோஜ் மகராஜ் வேணு: மாப்கரோஜ்-மண்ணாங்கட்டி ளவு காணும் தரணும். வியா : பத்து ரூபாய், ரோஜ் - எவ்வ வேணு: இந்தாங்கணும் (ரூபாய் எடுத்துக் கொடுக் கிறான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/17&oldid=1705880" இலிருந்து மீள்விக்கப்பட்டது