உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பராசக்தி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-21- வெள்ளியினால் செய்த ஏட்டில்- நல்ல வைர எழுத்தாணி கொண்டு தெள்ளு தமிழ் பாடம் எழுத உனை பள்ளியில் சேர்த்திட வருவார்-மாமன் அள்ளி அணைத்திட வருவார் கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ (பாடலின் கருத்து அவன் வருத்தத்தைப் பன்மடங்கு வளர்க்கிறது) ஆம். மாமன்மார்கள் ஆடம்பரமாக வருவார்கள். கல் யாணி உன் ஆசைக்கனவை நான் அழிக்க வேண்டாம். இந் தப் பைத்தியக்கார வேஷத்தில் நீ என்னைக் கண்டு கொள் ளவே வேண்டாம்-(இது குணசேகரனின் மனசாட்சி) குண : கடலிலே திசை மாறிப்போன கப்பல் அப்படியே கவிழ்ந்தே போயிருக்கக் கூடாதா? கல்யாணி உன்னை இந்த நிலையில் காணவா இவ்வளவு ஆவலோடு ஓடிவந்தேன். சுமைதாங்கி அருகே செல்கிறான்) சுமைதாங்கி இனி இதுவே என் சோகம் தாங்கி ! இதுவே என்வீடு! இங்கேயே என்வாழ்வு! கல்யாணியை நிழல்போல பின்தொடர்ந்து கொண்டிருப்பது என் உத்தியோகம். காட்சி-18 (மைனர்கள் சீட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர்) 1வது : திருப்பப்பா 2வது : மூணு ராஜா தம்பி ய்வது: எனக்கு மட்டும் மூணு ஆஸ் இருந்தால் வேணு: ஒரு லாண்டறியே வச்சிருவே 1வது : என்னப்பா சிரிக்கிறீங்க? நான் ஆட்டத்துக்கு வர்லே. வேணு ஏது ஆள் அவுட்டா.. சும்மா கெடப்பா போன காசையெல்லாம் திருப்பிடலாம். !வது : ஏண்டா அதற்குக்கூட காசு வேணுமே! ஏய்... நீ வச்சிருந்தால் கொடுக்கமாட்டியா? ஏய் ஒரு டேபின் மட்டும் கொடப்பா வேணு : பைசா நடிஹி! என்னப்பா... இரும்புப் பெட்டி சாவியை ஒங்க அப்பா ஒன்கிட்டே கொடுத்திருக்காரு பயப் பட்றியே... 1வது: சாவிதானே... எனக்கு அடிக்கடி காக்கா வலிப்பு வர்றது வழக்கம் அதனாலே கொடுத்திருக்காரு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/22&oldid=1705885" இலிருந்து மீள்விக்கப்பட்டது