உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பராசக்தி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~41~ பிறந்தவனுக்கு இடம் இல்லை உங்களைப்போன்ற இருதய மற்ற வர்கள் இருக்கும்வரை மனிதனுக்கே இடமில்லை, அன்பு, அறம் இவை அத்தனைக்குமே இடம் இல்லை. ஆம் : கெட் அவுட் கெட் அவுட் தொ : ககாப்புக் கடைக்குப் பெயர் கருணைமகால், இதற் குப்பெயர் அகதி முகாம் வா ருங்கள் போவோம். லாம். இப்படிச் சீரழிவதைவிட சிறைச்சாலைக்குச் செல்ல நொ : மொறு தம்பி திட்டவட்டமாக எதையும் யோசிக் காமல் அவசரத்தில் நாலுபேர் எதையுமே செய்துவிட்டால் சிறைச் சாலைக்குச் செல்ல வேண்டியதுதான். நம்முடைய நிலைமை உலகத்துக்கு தெரியாது பிச்சைக்காரர்கள் நாம்மட்டு மல்ல இந்தநாடு பூராவுமே பரந்துகிடக்கின்றனர். முதலில் பிச்சைக்காரர்கள் அத்தனை பேரையும் ஒன்றுசேர்க்க வேண் டும். நமக்காக அரசாங்கமோ நேச கட்சிகளோ பாடுபடுவதாக தெரியவில்லை. நம்முடைய கோரிக்கைகளை வீடு வீடடாக சென்று வெளியிடுவதைவிட நாடறியப் பரப்புவதே நலம், நம்முடையகுரல் அரகரா மகாதேவா என்று கைலாசத்துக்கு எட்டிப் புண்ணியம் இல்லை. அரசாங்கத்துக்கு எட்ட வேண் டும். பிச்சைக்காரர்கள் அத்தனையேரையும் ஒன்று சேர்த்து மகாநாடு ஒன்று நடத்த வேண்டும். அந்த மகாநாட்டுக்கு சென்னை மாகாணப் பிச்சைக்காரர் மகாநாடு என்று பெயரிட வேண்டும். (எல்லோரும் சிரிக்கின்றனர்) ஏன் சிரிக்கிறீர்கள்? சிரிப்பதற்காகச் சொல்லவில்லை. சிந்தனை செய்து பாருங்கள்? அதிலேபிறந்த தீர்மானம் நமக்குவோட்டுரிமை வேண்டுமென் பது அதைப் பெற்று விட்டால் நாம் சாலக்ஷனில் கூட நிற்க லாம் நம்மை காதிர்ந்து போட்டியிட எவரும் துணியமாட்டார் கள். எப்படியோ மகாநாடு நடத்த வேண்டும் அதிலே தீப் பொறி பறக்கும் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும். நாம் மூட்டுகிற புரட்சித் தீ அரசாங்கத்தையே நடுங்க வைக்க வேண்டும். (உயிர் போனாலும் சரி, நமது உரிமைக் குரலை உரக்க எழுப்ப வேண்டும் வருங்கால நமது சமுதாயத்தை வகையோடு வாழ்வதற்கு வழி வகுக்க முடியும். பிச்சைக்கார மகாநாடு வேண்டும் என்று கூட்டத்தினர் கூச்சலிட்டனர்) அப்படியானால் மான வசூலுக்குக் கிளப்புகிறேம்' காட்சி-35 (இடம் அகதி முகாம்) கல் : அண்ணா இரங்கூனிலிருந்து அகதிகள் எல்லாம் வந்துருக்காங்களாமே! ஆபி : ஆமா யாரு வேணும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/42&oldid=1705905" இலிருந்து மீள்விக்கப்பட்டது