உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பராசக்தி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-55- சந் : நான்தான் ஜட்ஜ்மெண்ட் எழுதினேன்; அண்ண கை இருந்தால் என்ன தம்பியாக இருந்தால் என்ன? குற்றம் குற்றம்தான். சர : இதோ பாருங்கள் கல்யாணியின் குழந்தை (சேகருக்கு பைத்தியம் மாறுகிறது அனைவரும் கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றனர்) சரஸ் : யாரது? விம : நீங்க இருங்க! நான் போய்ப் பார்த்து வருகிறேன்! (ஞானசேகரிடம்) என்ன வேண்டும்? ஞான: அம்மா அய்யா இருக்காங்களா? விம: ஏன்? ஞான : நாங்க ஒரு பிச்சைக்கார மகாநாடு நடத்த போகிறோம் அதற்கு நிதிகேட்க ( விமலா சிரிக்கிறாள்)ஏம்மா சிருக்கிறீங்க? இப்1 அப்படித்தான் இருக்கும்! இன்னும் கொஞ்ச நாள் போனால் பிச்சைக்காரனும் மந்திரி ஆகிடுவான் (வீட்டு வேலைக்காரன் மூலம் ஞானசேகரன் என அறி கின்றனர். சிதறிய குடும்பம் சிந்தை மகிழ்கிறது) விம : அப்போ நான் போயிட்டு வர்றேன்... குண : இதற்குள்ளாகவா? விம : வீட்டிலே தேடுவாங்க! குண : அப்புறம் உன்னை எப்ப பார்க்கிறது? விம : இனிமேல் பார்க்கவே முடியாது! குண : ஏன்? விம : அது அப்படித்தான் குண : சரி அப்படியானால் போ... (விமலாவின் சேலை யில் குணசேகரன் கட்டிய கயிற்றினால் நிறுத்தப்படுகிறாள்) குண : இன்பக் கனவை ஏனோ கலைக்கிறாய்? அன்புக்கயிறிதுதான் அறுக்க யாராலுமாகாதய்யா புதுப் பெண்ணின் மனதைத்தொட்டுப்போறவரே உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க இளம் மனதைத் தூண்டிவிட்டுப் போறவரே அந்த மர்மத்தைச் சொல்லிவிட்டுப் போங்க உ சேகர்: என்னப்பா குணசேF"T சரஸ்: தம்பி இதுக்கு இவ்வளவு பெரிய சுயிறு தேவை இல்லையே! சின்னக்கயிறு... கழுத்துக்கு பொருத்தமா திருந் தாலே போதும்! அதிலே ஒரு மஞ்சள்... குண அதெல்லாம் இந்தக் காலத்துக்கு தேவையில்லை அண்ணி. ரெண்டு மாலை, ஒரு சொற்பொழிவாளர் விஷயம் முடிஞ்சது. (இந்நேரம் கல்யாணி வருகிறாள்) கல் : அதோடுமட்டும் போதாது. என் பையனுக்கு ஒரு பொண்ணு பெத்துக் கொடுக்கணும்! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/56&oldid=1705919" இலிருந்து மீள்விக்கப்பட்டது