உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, அண்ணாதுரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 மலர்க் கொடியின் மனம், பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு. சங்கரன் மீது சென்றது. நிலைத்தது.அவனையேமணப் பது என்று அவளும் எண்ணினாள். அவள் எண்ணத்தை அறிந்ததும் அவன் துள்ளினான். படிப்பு முடிந்து பரீட்சை தேறியதும் மணம். எனவே நாளை எண்ணிக்கொண்டும், ஏட்டைத் தள்ளிக் கொண்டும், "என்று வரும் அந்நாள்'? என்று மந்திரம் ஓதியபடி இருந்தான். மங்கம்மாளுக்கு மலர்க்கொடிதான் செல்வம். அந்தப் பூஞ்சோலையில் விளைந்தது அது ஒன்றுதான்! ஒன்றே போதுமே. அது ஒப்பற்ற கொடியன்றோ! மங்கம்மாளுக்கு நவநாகரீகத்திலே விருப்பம். அதனு டைய மேற்பூச்சுகளில் மட்டுமல்ல. கருத்துக்களில் வேட் கை. தன் வாழ்க்கையிலே நாகரீகக் கோட்பாடுகளை புகுத்தி வாழ்ந்து வந்தனள். மலர்க் கொடியும் அப்படியே. சங்கரன் பார்வைக்கும், பேசும் போதும் நாகரீக புரு ஷனாகவே காணப்பட்டான். ஆனால் உள்ளத்திலே வைதீகம் குடிகொண்டிருக்கிறது என்பது மங்கம்மாள் கருத்து. அதனையே தன் மகளுக்கும் எடுத்துக் கூறினாள். மலர்க் கொடி அதனை நம்பவில்லை. நம்பாதுதான் நகைத்தாள். சிரிக்கிறாயா? ஏனோ? என்று மங்கம்மாள் கேட்டாள். இல்லையம்மா அவரைக்கூட சந்தேகிக்கிறாயே என்று தான் சிரித்தேன். நேற்று கூட அவர் தமது கல்லூரி மாணவர் சங்கத்திலே "மூட நம்பிக்கையும் முற்போக்கும் என்பதைப் பற்றி மிகதீவிரமாகப் பேசினாராம் என்றாள் மலர்க் கொடி.