உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, அண்ணாதுரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தானே கலியாணத்திலே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்" என்று சொல்லிற்று. சிச்சீ ! கூத்தாடிப்பொண்ணையா மணப்பது ? ஒரு மாடு வாங்குவதானாலும், எத்தனை குறிகள் பார்த்து வாங்குகிறோம்-என்று எச்சரித்தது ஜாதி உணர்ச்சி! எனவே சங்கரன், மலர்க்கொடியின் புகைப் படத்தைப் பார்ப்பதும், சிந்திப்பதுமாக ஒரு வாரங் காலந் தள்ளினான். அந்த ஒரு வாரமும் அவனுடைய முகத்தைக் காணாத மலர்க்கொடி வாடினாள். மங்கம்மாள் "என் பேச்சு சரி யெனத் தோன்றுகிறதல்லவா குழந்தாய்-சங்கரன், எப்படி ஒரு டிராமாக்காரியின் பெண்ணை மணப்பது என்று எண் ணுகிறான். பார்! அவனைவிட்டதா அந்த பழங்காலக் கொள்கை' என்று கூறினாள். இவ்வளவு தானா! நான் நாடகக்காரியின் மகள் என்ற காரணத்திற்காக, என் மீது இவர் வைத்திருந்த. காதல் எப்படி மாறுவது. என் தாய் நாடகக்காரி என்ப தால் எனது இலட்சணத்திலே எது மாறி விட்டது. என் உள்ளத்திலே இவர் என்னதவறு இருப்பதாகக் கருதுகிறார். என்னே ஜாதிப்பித்து! என்று எண்ணி எண்ணி ஏங்கினாள் மலர்க்கொடி. ஜிலுஜிலுவென்ற காற்றும், சிறு தூறலும் இருந்தால் தானே பூஞ்சோலை பூத்து நிற்கும் அதைப்போல காதலில் சிக்குண்டவர் முன்பு காதலை ஊட்டியவர், நின்று பேசி னால் தானே அவர்களுக்கு இன்பம்.