உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, அண்ணாதுரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" ஏகோபித்த குரலில் 'தென்னகத்துக்கோ' திராவிடத்து முடிசூடாமன்னன், வான வீதியிலே பவனிவரும் பால்நிலவு போன்று, திராவிடத்திலே பவனிவரும் தேன் நிலவாம் மக்கள் தலைவர் அறிஞர் அண்ணா அவர்களின் ஏடு ஒன்று ஏன் மலிவு பதிப்பாக வெளியிடவில்லை-அதற்கு எவரும் முன்வராத காரணமென்ன என்று மக்கள் எண்ணத்திலே கேள்வி எழுந்தன! வில்லிலிருந்து விடுபட்ட அம்புபோல வார்த்தை உருவிலே வந்த அந்த கேள்வி அம்புகள் எம்மை நோக்கியும் பாய்ந்து வந்தன! "அவாள் ஏடுகளுக்கு சவால்' என்று அடிக்கடி கூறுவாரே நமது விடுதலை படைவரிசையின் முதல் படை வரிசை தளபதி கலைஞர் கருணாநிதி அவர்கள் ! முரசொலி பொங்கல் மலருக்கு ஒரு வேடிக்கைச் சொல்லாக உபயோகிப் பார் ! அதையே தான் நாங்களும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம். பரதன் என்ற பெயரிலே 1940ம் ஆண்டு அறிஞர் அண்ணா குடியரசு வார இதழ்களிலே தொடர்வாக எழுதிவந்த "சிங்களச் சீமாட்டி" இங்கு பரிசு என்ற தலைப்பின் கீழ் திகழ்கிறாள். அடுத்து- அழியாத காதல் ஓவியமாக நாட்டிற்கு பயன்பெற குடியரசு இதழ்களில் "பரதன்" என்ற